உலோக ஹேலைட்டு விளக்கு

உலோக ஹேலைட்டு விளக்கு அல்லது மெட்டல் ஹலைடு விளக்குகள் இது ஒரு HID (High Intensity Discharge-உயர் மின் உமிழ்வு), அதாவது ஆவியாக்கப்பட்ட பாதரசம் மற்றும் உலோக ஹலைடுகளின் வாயு கலவையைக் கொண்டுள்ள ஓர் உமிழ்வுக்குழாயில் ஏற்படும் மின்சார பொறி மூலம் ஒளியை உற்பத்தி செய்கிறது. இங்கு பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான உலோக ஹலைடு கலவை சோடியம் அயோடைடு ஆகும்.

மெட்டல் ஹலைடு விளக்கு (Metal Halide Bulb)

உமிழ்வுக்குழாய் அதன் இயங்கு வெப்ப நிலையை அடைந்ததும், சோடியம் அயோடினில் இருந்து பிரியும் போது உண்டாகும் அயனாக்கத்திலிருந்து வெளிப்படும் நிறமாலையினால் வெளிச்சம் உண்டாகும். இதன் விளைவாக, மெட்டல் ஹலைடு விளக்குகள் ஒரு வாட்டிற்கு சுமார் 75–100 lumens வரை அதிக ஒளிரும் செயல்திறனைக் கொண்டுள்ளன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.