உலகளாவிய வலைச் சேர்த்தியம்

உலகளாவிய வலைச் சேர்த்தியம் (World Wide Web Consortium, W3C), உலகளாவிய வலைக்கான முதன்மையான பன்னாட்டு செந்தரமாக்க நிறுவனம் ஆகும். 

திம் பேர்னேர்சு-லீ நிறுவி வழிநடத்தி வரும் இச்சேர்த்தியம்,[1] உலகளாவிய வலைக்குச் செந்தரங்களை உருவாக்குவதற்கு என்றே முழு நேரப் பணியாளர்களைக் கொண்ட பல்வேறு உறுப்பு நிறுவனங்களால் ஆனது. ஆகத்து 11, 2015 நிலவரப்படி, உலகளாவிய வலைச் சேர்த்தியத்தில் 391 உறுப்பினர்கள் இருந்தனர்.[2]

செந்தரம் உருவாக்கும் பணி தவிர, உலகளாவிய வலைச் சேர்த்தியம் அது தொடர்பான கல்வி, பரப்புரை, மென்பொருள் உருவாக்கம் மற்றும் உலகளாவிய வலை தொடர்பான உரையாடல்களுக்கான திறந்த மன்றமாகவும் திகழ்கிறது.

சான்றுகள்

  1. W3C (September 2009). "World Wide Web Consortium (W3C) About the Consortium". பார்த்த நாள் 8 September 2009.
  2. "World Wide Web Consortium – current Members".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.