உற்பத்திப் பொருள் வடிவமைப்பு

உற்பத்திப் பொருள் வடிவமைப்பு என்பது திறன் வாய்ந்த, பயனுள்ள கருத்து உருவாக்கம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றுடன் கூடிய செய்முறையிலான புதிய விளைபொருளை வரையறை செய்வதாகும்.[1] உற்பத்திப்பொருள் வடிவமைப்பாளர்கள் கருத்துக்களை உருவாக்கி, அவற்றை மதிப்பீடு செய்து, ஒரு முறையான அணுகுமுறையில், உற்பத்திப் பொருட்கள் மூலமாக அவற்றைத் தெளிவுபடுத்துகின்றனர். சந்தை மேலாளர், உற்பத்திப் பொருள் மேலாளர், தொழிற்சாலை வடிவமைப்பாளர் மற்றும் வடிவமைப்பு பொறியாளர் ஆகியோரின் பல நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பணியை உற்பத்திப் பொருள் வடிவமைப்பாளர் மேற்கொண்டு வருகிறார்.

பணி வடிவமைப்பு, அமைப்பு வடிவமைப்பு, இடைத்தாக்க வடிவமைப்பு ஆகியவற்றுடன் உற்பத்திப் பொருள் வடிவமைப்பு என்ற இப்பதம் சில சமயங்களில் குழப்பப்படுகிறது. தொட்டுணரக்கூடிய முப்பரிமாண பொருட்களை உண்டாக்குவதற்கு உற்பத்திப்பொருள் வடிவமைப்பாளரின் பங்கானது கலை, அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவற்றை இணைக்கிறது. முற்காலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட மனித சக்தி குறித்த வழிமுறைகளை கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், கற்பனை செய்யவும், பகுப்பாய்வு செய்யவும் வடிவமைப்பாளர்களை அனுமதிக்கும் பட்சத்தில் இம்முறையை எளிதாக்க இயலும்.

தேவைப்படும் திறமைகள்

உற்பத்திப் பொருட்களை கருத்துருவாக்க நிலையிலிருந்து சந்தைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான திறமைகளை உற்பத்திப்பொருள் வடிவமைப்பாளர்கள் பெற்றுள்ளனர். வடிவமைப்புத் திட்டங்களை நிர்வகிக்கவும், வடிவமைப்புத் தொழிலின் பிற பிரிவுகளுக்கு துறைகளைத் துணை ஒப்பந்தம் செய்யக் கூடிய திறனையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும். உற்பத்திப் பொருள் வடிவமைப்பிற்கு அழகுணர்ச்சி இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. ஆனாலும் வடிவமைப்பாளர்கள் தொழில் நுட்பம், பணிச்சூழலியல், பயன்பாடு, தகைமை ஆய்வு மற்றும் பொறியியல் உள்ளிட்ட இன்றியமையாத அம்சங்களுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றனர்.

பெரும்பாலான வடிவமைப்புப் புலங்களில் உள்ளது போல், ஓர் உற்பத்திப் பொருளுக்கான வடிவமைப்பு, ஓர் அவசியத்திலிருந்து உதயமாவதுடன், அதற்கு ஒரு பயனும் உள்ளது. அது ஒரு குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றுகிறது. மேலும் சிலசமயங்களில், சங்கம் மற்றும் மனிதமுயற்சியால் வெற்றி கொள்ளுதல் போன்ற சில சிக்கலான காரணிகளும் இதற்குப் பொறுப்பாகலாம். தொழில் நுணுக்கத்தில் தகுதி வாய்ந்த ஒரு உற்பத்திப் பொருள் வடிவமைப்பாளரையோ அல்லது தொழிலக வடிவமைப்பாளரையோ குறிப்பதற்கு, தொழிலக வடிவமைப்பு பொறியாளர் என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.

பயன்பாடு

சில நிறுவனங்கள் அல்லது தனி மனிதர்கள் வளரும் புதிய உற்பத்திப் பொருட்களின் மேல் அதிக விருப்பம் கொண்டுள்ளனர். நாகரீக உலகில், முக்கியமாக ஐரோபோ, கூகிள், அல்லது நோக்கியா போன்ற தொழில் நுட்ப நிறுவனங்கள் இவற்றில் உள்ளடங்கும். நூதன கண்டுபிடிப்புகளில் சாதகமான போட்டியைக் கட்டிக்காக்கும் தேவையிலிருக்கும் நிறுவனங்களுக்கு, பெரும்பாலான உற்பத்திப் பொருள் வடிவமைப்பாளர்கள் திட்ட வல்லமையுள்ள சொத்துக்களாக உள்ளனர்.

குறிப்புகள்

  1. Morris 2009, பக். 22.

வெளிப்புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.