உயிரளபெடை

உயிரளபெடை [1] என்பது உயிரெழுத்து அளபெடுத்து வருதல். [2] உயிரெழுத்துக்களில் குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை. மேலும் எழுத்துக்களுக்கு ஒலியளவைக் கூட்டவேண்டி வரும்போது ஒத்த ஒலியுடைய எழுத்தைக் கூட்டி எழுதி ஒலித்துக்கொள்ளுமாறு காட்டுவர். [3]

அளபெடுகும் எழுத்துக்கள்

உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு அளபெடுக்கும்.

எடுத்துக்காட்டுஅளபெடுத்த எழுத்துஅளபெடுத்துள்ள பாங்குகுறிப்பு
பாஅல் புளிப்பினும் (பெயர்ச்சொல்), [4], புகாஅர் (வினைமுற்று) [5], புகாஅர்த் தெய்வம் (ஊர்) [6], ஆஅய் (அரசன்) [7]ஆஅபால் - பாஅல்செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர், படாஅஅ முலைமேல் துகில் [8]ஆஅஅகடா - கடாஅ, படா - படாஅஅசெய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை
பறையின் கண்ணகத்து எழுதிய குரீஇப் போல [9]ஈஇகுருவி - குரீஇசொல்லிசை அளபெடை
கொடுப்ப(து) அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் [10]ஊஉஉடுப்பதும் - உடுப்பதூஉம், உண்பதும் - உண்பதூஉம்அளபெடுக்காவிட்டாலும் செய்யுளில் தளை தட்டாது ஆகையால் இன்னிசை அளபெடை
பேஎம் முதிர், மன்றத்து [11]ஏஎபேம் - பேஎம் [12]இன்னிசை அளபெடை
இன்சொலால் ஈரம் அளைஇ [13]ஐஇஅளவி - அளைஇசொல்லிசை அளபெடை
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி, [14]ஓஒகோல் - கோஒல்செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை
-ஔஉ--

அளபெடுக்கும் இடங்கள்

மொழியின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.: எடுத்துக்காட்டு:

1 ஓஒதல் வேண்டும் முதல்
2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு இடை
3 நல்ல படாஅ பறை கடை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காணலாம்.
ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும்.

வகைகள்

இதில்

என மூன்று வகைகள் உள்ளன.

அளபெடைப் பெயர்

இந்தச் சொற்களைத் தொல்காப்பியம் பால் உணரும்படி வந்த சொற்கள் எனக் குறிப்பிடுகிறது. [17]

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

  • முனை. நல்லாமூர் கோ. பெரியண்ணன், அடிப்படை எளிய தமிழ் இலக்கணம், வனிதா பதிப்பகம், சென்னை-17, முதல் பதிப்பு 2003

அடிக்குறிப்பு

  1. உயிர் + அளபு + எடை(=எடுத்தல்)
  2. ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து அளபெடுத்து வருதல்.
  3. இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
    அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ -நன்னூல்
  4. புறநானூறு 2
  5. குறுந்தொகை 130
  6. அகம் 110
  7. நற்றிணை 167
  8. திருக்குறள் 1087
  9. நற்றிணை 58
  10. திருக்குறள் 166
  11. பட்டினப்பாலை 255
  12. அச்சம்
  13. திருக்குறள் 91
  14. புறநானூறு 117
  15. ஆடூஉ முன்னிலை
  16. மகடூஉ முன்னிலை
  17. ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயரும் (தொல்காப்பியம், 2-163 பெயரியல்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.