உயர்திணை

உயர்திணை (ஒலிப்பு ) என்பது தமிழ் இலக்கணத்தில் தேவர், மாந்தர், நரகர் என்பவர்களை வகைப்படுத்தும் சொல்லாகும். இவர்களுக்கு உள்ளதெனக் குறிப்பிடப்படும் பகுத்தறிவு குறித்து இவ்வுயர்திணை என்ற பெயர் இடப்பட்டிருக்கலாம். பகுத்தறிவில்லாத உயிரினங்களும் உயிரற்ற பொருட்களும் அஃறிணை என்று பிரிக்கப்படும்.

உயர்திணைப் பெயர்களை அஃறிணைப் பொருள்களான விலங்குகள்,தோட்டம் முதலானவற்றிற்கும் வைக்கப்படலாம். தமிழ் இலக்கணத்தில் இவை விரவுப்பெயர்கள் என வழங்கப்படுகின்றன. 26 வகை விரவுப்பெயர்களை காணலாம்.[1]

குறிப்புகள்

  1. http://www.tamilvu.org/testsite/html/justify.htm தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பாடவுரை

வெளிப் பார்வை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.