உம் குல்தூம்

உம் குல்தூம் எனப் பரவலாக அறியப்படும் பாத்மா எப்ராகிம் எல்பெல்த்தாகி ஒரு எகிப்தியப் பாடகரும், பாடலாசிரியரும், நடிகையும் ஆவார். எல் சென்பெல்லாவெயின் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள தாமே எசு சகாய்ரா என்னும் இடத்தில் பிறந்த இவர் கிழக்கின் நட்சத்திரம் எனப் புகழப்படுகிறார். இறந்து மூப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆனபோதும் இன்றும் இவர் 20 ஆம் நூற்றாண்டின் மிகப் புகழ் பெற்ற அரபுலகப் பாடகிகளுள் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

உம் குல்தூம்
பிறப்புபாத்மா எப்ராகிம் எல்பெல்த்தாகி
டிசம்பர் 31, 1898
தாமே எசு சகாய்ரா, எகிப்து
இறப்புபெப்ரவரி 3, 1975(1975-02-03) (அகவை 70)
கெய்ரோ, எகிப்து
இறப்பிற்கான
காரணம்
நெப்ரிடிசு
கல்லறைகெய்ரோ, எகிப்து
தேசியம்எகிப்தியர்
பணிபாடகர்r, நடிகை
சமயம்இசுலாம்
வாழ்க்கைத்
துணை
அசன் எல் எஃப்னூயி

வாழ்க்கை வரலாறு

இளமைக்காலம்

இவர் பிறந்த தேதி குறித்துச் சரியான தகவல்கள் இல்லை. எகிப்தியத் தகவல் அமைச்சகமும் இவர் 1898 டிசம்பர் 31 ஆம் தேதி அல்லது 1904 டிசம்பர் 31 ஆம் திகதி பிறந்திருக்கலாம் எனக் கூறுகின்றது.

இளமையிலேயே இவர் மிகச் சிறந்த பாடும் திறமையை வெளிக்காட்டினார். ஒரு இமாம் ஆன இவரது தந்தையார் திருக்குர்ஆனை ஓதுவதற்கு இவருக்குக் கற்றுக்கொடுத்தார். இவர் இந் நூல் முழுவதையுமே மனனம் செய்திருந்ததாகக் கூறப்படுகின்றது. இவருக்குப் 12 வயதாயிருந்தபோது இவரது தந்தையார் இயக்கிய நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக இவரை ஒரு பையன் போல வேடமிட்டுச் சேர்த்துக்கொண்டார். இவருடைய 16 ஆவது வயதில், அபோல் எலா மொகமத் என்னும் ஓரளவு பெயர் பெற்ற பாடகர் இவரது திறமையை உணர்ந்துகொண்டார். அத்துடன் புகழ் பெற்ற இசைக் கலைஞரான சக்காரியா அகமத் என்பவர் உம் குல்தூமை கெய்ரோவுக்கு வருமாறு அழைத்தார். எனினும் 1923 ஆம் ஆண்டிலேயே குல்தூம் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு கெய்ரோவுக்குச் சென்றார். அமின் பே அல் மகிதி என்னும் இன்னொரு புகழ்பெற்ற இசைக்கலைஞர் இவரை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து "அவுட்" எனப்படும் இசைக் கருவியை வாசிக்கக் கற்றுக்கொடுத்தார். இக்காலத்தில் அல் மகிதியின் மகளான ரவ்கேயா அல் மகிதியுடன் நெருக்கமான நட்புப் பூண்டார்.

அமின் அல் மகிதி, குல்தூமை கெய்ரோவின் கலைஞர் வட்டத்துக்கு அறிமுகப்படுத்தினார். குல்தூம் அக்காலத்தில் பிரபலமாக இருந்த பொகீமிய வாழ்க்கை முறையைத் தவிர்த்து வந்ததுடன், எப்பொழுதும் தனது எளிமையான மூலத்தில் பெருமை கொண்டவராகவும், பழமையான விழுமியங்களைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவராகவும் இருந்தார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.