உப்புத் தொழில் (தமிழர் தொழிற்கலை)
தமிழர் தாயகப் பகுதிகள் கடற்கரையை அண்டிய பகுதிகளாக இருந்தமையால் தமிழர்கள் உப்புத் தொழிலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறார்கள்.



இலங்கை
இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகள் ஆன ஆனையிறவு, நிலாவெளி, சிவியாதெரு, இருபாலை, கரணவாய், கல்லுண்டாய், முல்லைத்தீவு முதலிய இடங்களில் உப்புப் பெறப்படுகின்றது.[1] இப் பகுதிகளில் பல உப்பளங்கள் உள்ளன.
இந்தியா
தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, காஞ்சிபுரம் போன்ற கரையோர மாவட்டங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கையினால் தமிழ்நாட்டு உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு இந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.[2]
பொருளாதார முக்கியத்துவம்
உப்புத் தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். உப்பு தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பொருளாகவும் உள்ளது.