உத்ரா உன்னிகிருஷ்ணன்

உத்ரா உன்னிகிருஷ்ணன் (Uthara Unnikrishnan, பி: 2004) ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். 2015 ஆண்டு, சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது பெற்றவர் இவ்விருது 2014 ஆம் ஆண்டில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் தமிழ்த் திரைப்படத்தில் இவர் பாடிய "அழகு"... பாடலுக்காக இவருக்கு வழங்கப்பட்டது[1]. இப்பாடலை இவர் பாடிப் பதிவுசெய்யப்பட்டபோது இவரது வயது எட்டாகும்[2]. சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதினைத் தனது 10 ஆவது வயதில் பெற்ற உத்ரா உன்னிகிருஷ்ணன், இவ்விருதினைப் பெற்ற இளம்பாடகர் என்ற பெருமைக்கும் உரியவரானார்.[3][4]

உத்ரா உன்னிகிருஷ்ணன்
பிறப்பு11 சூன் 2004 (2004-06-11)
தேசியம்இந்தியர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2012நடப்பு
அறியப்படுவது2015 சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது
பெற்றோர்பி. உன்னிகிருஷ்ணன்
பிரியா உன்னிகிருஷ்ணன்

வாழ்க்கைக் குறிப்பு

உத்ரா உன்னிக்கிருஷ்ணனின் பெற்றோர் கருநாடக இசைப் பாடகர் பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் பரத நாட்டியக் கலைஞர் பிரியா உன்னிகிருஷ்ணன் ஆவர். இவரது தந்தை உன்னிக்கிருஷ்ணன் பலமுறை சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது பெற்றவராவார். முதன்முதலாக 1995 இல் அவரது அறிமுகத் திரைப்பாடல்களான "என்னவளே அடி என்னவளே", "உயிரும் நீயே" ஆகியவற்றுக்காக சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது பெற்றார்.[3]. தனது ஆறாவது வயதில் சுதா ராஜா என்ற ஆசிரியரிடம் கருநாடக இசைப்பயிற்சியைத் தொடங்கிய உத்ரா உன்னிக்கிருஷ்ணன், தமிழிசை மட்டுமல்லாது மேல்நாட்டு இசை பயில்வதிலும் ஆர்வம் கொண்டவர்.[5][6]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.