உணவுவழி நோய்த்தொற்று

உணவுவழி நோய்த்தொற்று (Foodborne illness அல்லது foodborne disease) என்றும் பொதுவழக்கில் உணவு நஞ்சாதல் (food poisoning) என்றும்[1] கெட்டுப்போன உணவை அல்லது நோயுண்டாக்கும் பாக்டீரியா, தீ நுண்மம், ஒட்டுண்ணிகளால் மாசுபட்ட உணவை உண்பதால் நோயுறுவது குறிக்கப்படுகிறது.[2] தவிர வேதியியல்|வேதிப்பொருள் அல்லது நச்சுக்காளான் போன்ற இயற்கை நச்சுக்கொருள்|நச்சுப்பொருட்களை உண்பதாலும் நோய் உண்டாகலாம்.

படத்தில் காட்டியவாறு சரிவர சேமிக்காத உணவை உண்பதால் நோயுறுகின்றனர்.

உணவு நஞ்சாதல் இருவழிகளில் ஏற்படுகிறது: நச்சுப்பொருளால் அல்லது நோய்த்தொற்றால். உணவு நஞ்சாதல் எனப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும் நஞ்சு என அறியப்படும் உணவிலுள்ள வேதிப்பொருள் அல்லது நச்சுப்பொருளால் பெரும்பாலும் நோயுறுவதில்லை; நோயுண்டாக்கும் பாக்டீரியா, தீ நுண்மம், ஒட்டுண்ணிகளால் மாசுபட்ட உணவை உண்பதாலேயே பெரும்பான்மையினர் நோயுறுகின்றனர்.[3]ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 76 மில்லியன் மக்கள் உணவுவழியால் நோயுறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 5000 பேர்கள் வரை இதனால் மரணமடைவதாகவும் மதிப்பிடப்படுகிறது.[4]

அறிகுறிகளும் நோய்க்குறிகளும்

உணவு நஞ்சாதலுக்கான முதன்மைகாரணியாக விளங்கும் கேம்ப்பிலோபாக்டர் என்ற பாக்டீரியா.

உணவு உண்டபின் பல மணி அல்லது பல நாட்கள் கழித்து நோய்க்குறிகள் தோன்றலாம். நச்சுத்தன்மை பெற எது காரணம் என்பதைப் பொறுத்து இவை வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப் பிரட்டல், பேதி மற்றும் சுரம், தலைவலி, உடல்தளர்வு எனக் காணப்படலாம்.

பெரும்பாலான சமயங்களில் கடிய நோய் மற்றும் மன உலைவு ஏற்பட்டாலும் உடல் விரைவாக பழையநிலைக்கு திரும்புகிறது. கூடுதல் தீ வாய்ப்புள்ள குழந்தைகள், சிறுவர்கள், கருவுற்ற மகளிர் (அவர்களின் கரு), வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குன்றியவர்கள் உணவுவழி நோய்த்தொற்றால் நிரந்தர நலக்கேடு பெறுவதுடன் மரணமடையவும் கூடும். உணவுவழி நோய்களில் பெரும்பான்மையாக (77.3%) விலங்குகளின் திடக்கழிவுகளில் காணப்படும் கேம்ப்பிலோபாக்டர் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகின்றன. அடுத்து சால்மனெல்லா, சிகெல்லா போன்ற பாக்டீரியாக்களால் நோய்த்தொற்றுகள் உண்டாகின்றன.

மேற்கோள்கள்

  1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் food poisoning
  2. US CDC food poisoning guide
  3. "Disease Listing, Foodborne Illness, General Information". cdc.gov. பார்த்த நாள் 14 July 2010.
  4. "Ten Common Food Poisoning Risks - Well Blog - NYTimes.com". well.blogs.nytimes.com. பார்த்த நாள் 14 சூலை 2010.

பிற வலைத்தளங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.