உணர்ச்சிகள் (திரைப்படம்)
உணர்ச்சிகள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், எல். காஞ்சனா, ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
உணர்ச்சிகள் | |
---|---|
இயக்கம் | ஆர். சி. சக்தி |
தயாரிப்பு | கே. எல். போஸ் எம். சர்தார் பி. எஸ். புரொடக்ஷன்ஸ் |
கதை | ஆர். சி. சக்தி |
இசை | ஷியாம் |
நடிப்பு | கமல்ஹாசன் எல். காஞ்சனா ஸ்ரீவித்யா |
ஒளிப்பதிவு | ஆர். என். பிள்ளை |
படத்தொகுப்பு | ஜி. கல்யாண சுந்தரம் |
வெளியீடு | சூன் 25, 1976 |
நீளம் | 3962 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- கமல்ஹாசன் - முத்து
- எல். காஞ்சனா - கமலா
- ஸ்ரீவித்யா - மரகதம்
- மேஜர் சுந்தர்ராஜன் - டாக்டர்
- லலிதாசிறீ
- எஸ். வி. ராமதாஸ் - பூபதி
- வி. கோபாலகிருஷ்ணன் - பாலு
- கே. கே. சுந்தர் - காவல்துறை ஆய்வாளர்
- வெள்ளை சுப்பையா - சுப்பையா (ரூம் பாய்)
பாடல்கள்
ஷியாம் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. பாடல் வரிகள் கண்ணதாசன், பட்டுக்கோட்டை தண்டாயுதபாணி, வெழவந்தான், முத்துலிங்கம் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது.
எண். | பாடல் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|
1 | "நெஞ்சத்தில் போராடும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:20 |
2 | "உன் ஆசையா" | ஷியாம் | 4:13 |
3 | "நான் என்ன செய்தேன்" | பலர் | 2:24 |
4 | "அலைந்திடும் நான்" | எஸ். ஜானகி, பி. சுசீலா | 5:00 |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.