உடன்பிறப்பு

உடன் பிறப்பு (ஒலிப்பு ) (Sibling) என்பது இரத்த சொந்தங்களுள் ஒன்றாகும். உடன் பிறப்புகள் ஒரே பெற்றோரை கொண்டிருப்பார்கள். அது தாயாகவோ, தந்தையாகவோ அல்லது இருவருமாகவோ இருக்கக்கூடும். பொதுவாக உடன் பிறப்பு ஆணாக இருப்பின் சகோதரன் என்றும், பெண்ணாக இருப்பின் சகோதரி என்றும் அழைக்கப்படுகின்றனர். உலகில் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் உடன் பிறப்புகள் ஒன்றாகவே வளர்கின்றனர். எனவே உடன் பிறப்புகள் எப்போதும் நல்ல உணர்ச்சி பிணைப்புடன் காணப்படுகின்றனர். இந்த உணர்ச்சி பிணைப்பானது ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் வேறுபட்டு இருக்கும். பெற்றோர் தங்களை நடத்தும் விதம், பிறப்பு முறைமை, குடும்பம் தவிர்த்த மற்றவருடனான தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் தனி நபர் குணம் போன்றவை இந்த மாறுபட்ட உணர்ச்சி பிணைப்புக்கு காரணமாக அமைகிறது.[1] பல்வேறு காரணங்களால் தனித்தனியாக வளர்கின்ற உடன் பிறப்புகளும் இருக்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. Mersky Leder, Jane (Jan–Feb 1993). "Adult Sibling Rivalry". Psychology Today. பார்த்த நாள் November 28, 2006.
  2. Dr. Shafer, Aaron. "Understanding genetics". The Tech. Stanford University. பார்த்த நாள் 13 December 2013.
  3. Hayashi, C; Mikami, H; Nishihara, R; Maeda, C; Hayakawa, K (2014). "The relationship between twin language, twins' close ties, and social competence". Twin Research and Human Genetics 17 (1): 27–37. doi:10.1017/thg.2013.83.
  4. Dr. Starr, Barry. "Why half siblings share 25% of their DNA – Understanding". The Tech. Stanford University. பார்த்த நாள் 19 June 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.