உடனிசைவு (வேதியியல்)
உடனிசைவு (Resonance) என்பது இரட்டைப் பிணைப்புகளைத் தகுந்த இடங்களில் கொண்டுள்ள கரிமச் சேர்மங்களைக் குறிக்கப் பயன்படும் ஒரு வழிமுறையாகும். இதன் படி இவ்வாறான கரிமச் சேர்மங்களை ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மூலமாக மட்டும் குறிப்பிட்டால், அச்சேர்மத்தின் சில பண்புகளை விளக்க இயலாது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகளால் குறிப்பிடும் போது தான் அச்சேர்மத்தின் பண்புகளை முழுமையாக விளக்க இயலும். ஒரு கரிமச் சேர்மத்தின் பிணைப்பு மற்றும் தனித்த இரட்டை எதிர்மின்னிகளின் இட அமைப்பில் மட்டுமே மாறுபடும், ஒன்றிற்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான அமைப்புகளே உடனிசைவு அமைப்புகள் எனப்படுகின்றன.[1]

விளக்கம்
பென்சீன் மற்றும் 1,3-பியூட்டாடையீன் போன்ற சேர்மங்களை ஒரே ஒரு அமைப்பைக் கொண்டு குறிப்பிட இயலாது. அச்சேர்மங்களின் கண்டறியப்பட்ட பண்புகளை உடனிசைவு கலப்பு அமைப்பினைக் கொண்டு விளக்க முடியும். 1,3-பியூட்டாடையீனில், C2 – C3 பிணைப்பிற்கு இடைப்பட்ட தொலைவினைக் காட்டிலும் C1 – C2 மற்றும் C3– C4 ஆகிய பிணைப்புகளுக்கு இடையிலான தொலைவு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மேற்கண்டுள்ள அனைத்து பிணைப்புகளின் பிணைப்பு நீளமும் சமமாக உள்ளது. C1– C2 மற்றும் C3 – C4 ஆகியவற்றிற்கிடையே உள்ளடங்கியுள்ள π பிணைப்புகள் காணப்படும் ஒரு எளிய அமைப்பின் மூலம் மேற்கண்ட பண்பினை விளக்க இயலாது. உண்மையில் π எதிர்மின்னிகள் உள்ளடங்காத் தன்மையினைப் பெற்றுள்ளன.
மேற்கோள்கள்
- தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Resonance". Compendium of Chemical Terminology Internet edition.