உச்சரிப்பு

உச்சரிப்பு என்பது ஓரு மொழியை எவ்வாறு பேசுவது அல்லது ஓரு மொழியின் வார்த்தைகளை எவ்வாறு உச்சரிக்கப்படுகிறது என்பதாகும். எந்தவொரு மொழியிலும் வார்த்தையும் உதடுகள் குவித்து,வாயின் நடுவில் இருந்து தொண்டையிலிருந்து மற்றும் வயிற்றிலிருந்து உருவாகும் ஒலிகளே, உச்சரிப்பு அல்லது பலுக்கல் எனப்படும்.[1] ஓரு வார்த்தை பல்வெறு வகைகளில் பல்வெறு பிரிவினரால் உச்சரிக்கப்படுகின்றது. எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்கவில்லையயெனில் சொற்களின் பொருள்கள் வேறுபட்டுவிடும். நாம் பேசுவதன் கருத்தைப் பிறர் தெளிவாக உணர்ந்துகொள்ள நாம் சொற்களில் உள்ள எழுத்துக்களைச் சரியாக உச்சரித்தல் அவசியமாகும்.

ஒருவன் ஒரு மொழியை உச்சரிப்பது என்பது அவனுடைய உடல் அமைப்பு, வாழும் சூழல், தட்ப வெட்ப நிலைகள் போன்ற பல காரணிகளைப் பொருத்து வேறுபடும்.

தமிழ் உச்சரிப்பு முன்னேற பங்களித்தவர்கள்

1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பொறியியல் அறிஞராகவும்,தமிழறிஞராகவும் இருந்த பா. வே. மாணிக்க நாயக்கர் தமிழ் உச்சரிப்பு (Tamil Phonology) என்னும் தலைப்பில் அமைந்த சொற்பொழிவுகளை தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் நிகழ்த்தியுள்ளார்.[2]

மொழியை உச்சரிப்பதில் உடல் பாகங்களின் பங்கு

ஓலி பிறக்கும் இடங்கள்

  • மார்பு
  • கழுத்து
  • மூக்கு
  • ஒட்டுமொத்தத் தலை

ஒலி வெளிப்படும் இடங்கள்

  • பல்
  • உதடு
  • நாக்கு
  • அண்ணம்

தொடர்புடைய பணி வாய்ப்புகள்

  • பேச்சு மற்றும் உச்சரிப்பு பயிற்சியாளர்

தொடர்புடைய விடயங்கள்

  • உதடு படாத சப்தங்களைக்(எ.கா.: க,ங,ச,ஞ, போன்றவை) கொண்ட வார்த்தைகளாலேயே ஆன ராமாயணம் ஒன்றை ஒருத்தர் எழுதியிருக்கிறார். அதற்கு 'நிரோஷ்ட ராமாயணம்'என்று பெயர்.[3]

இவ‍ற்றையும் காண்க

உசாத்துனைகள்

  1. உச்சரிப்பு
  2. http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-/2009-01-18-13-10-32
  3. தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.