ஈயான்குலம் இசக்கியம்மன் கோயில்

முக்கடலும் முத்தமிடும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 திவ்யதேசத்தில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்திற்கு அருகில் ஆற்றூர் புலிபுனம் சாலையில். தாமிரபரணியின் கிளை நதியான பருத்திவாய்காலுக்கும் ஈயான்குளத்துக்கும் எதிரில் தொழிச்சல் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஈயான்குளம் இசக்கி அம்மன் கோவில்.

இந்திரனிடம் பாரதத்தின் தொன்பகுதியில் நடக்கும் அநீதியை அழிக்க இயக்கி, இயக்கன், ரக்ஷ்சன், ரக்ஷ்சி என பல பெயர்களில் தொடர்ந்து அவதாரம் எடுதுகொண்டிருப்போன் என்ற ஆதிபராசக்தி( தகவல்: தேவி பகவதம்). இப்பகுதியில் பல ஆண்டுகளாக பொது மக்களுக்கு அருள்புரிந்து வந்த அம்மன். பெண்கள் வெற்றிலை வைத்து வேண்டினால் அவசர தேவைகளுக்கு பொன்னாபரணம் தந்து உதவியதாகவும், திருவட்டர் ஆதிகேசவ பெருமாள் ஆலயதிற்கு போகும் பாதையில் அம்மனுகு தனது பரிவாரத்தோடு படயல் வைத்து வேண்டி செல்வதாவும் செவிவழி செய்தி கூறுகிறது. காலரா போன்ற உயிற்கொல்லி நோய்கள் வந்த போது அம்மனே இப்பகுதி மக்களை கத்ததாக முதியோர்கள் கூறுகிறார்கள்.

இப்பகுதி மக்களோடு இரண்டற கலந்த அம்மனுக்கு பழைய ஆலயத்துக்கு அருகில் அரைகோடி ரூபாய் செலவில் 34 அடி உயர கோபுரத்தோடு புதிய கோவில் நிறுவப்பட்டு அம்மன் அருளால் 06/04/2012 ம் நாள் மடாதிபதிகள் ஆன்மிக தலைவர்கள் இலட்சகணக்கன பக்தகோடிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது.

பிள்ளைவரம் கிடைக்கும் இத்திருதலத்தில் வந்து வேண்டினால் எல்லாவிதமான தோசமும் தீரும் என்பது பக்தர்களின் அசைகமுடியாத நம்பிக்கை.

ஆறு மற்றும் குளத்தை தன் எதிரோ கொண்டுள்ள அபூர்வமான இத்தலத்தில் அரசமரத்தோடு ஆலமரம் இணைந்திருப்பதும் புனிதமாக கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரோ கோபுரத்தில் செண்பகவல்லி,நீலகோசி என்ற இரு திருநாமத்தில் இரு தோவியராய் இசக்கி அம்மன் அருள்புரிவது மற்றுமோர் சிறப்பு ஆகும்.

பூஜை நோரம்:

தினமும் மாலை : 7.00 மணி

சிறப்பு பூஜை காலை : 7.00 மணி (அஷ்தம்,ஆயில்யம்,பெளர்ணமி மற்றும் விஷேச நாள்கள்)

திருவிழா : பன்குணி மாத அஷ்தம் நட்சதிரதய் மையமாக வைத்து ஏழு நாட்கள்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.