இவியான் சார்கோசு
இவியான் லுனசோல் சார்கோசு கோல்மெனரசு , (Ivian Lunasol Sarcos Colmenares, பிறப்பு சூலை 26, 1989, குவானேர்,போர்த்துகீசா, வெனிசுவேலா) வெனிசுவேலா அழகியாக 2010இலும் உலக அழகியாக 2011இலும் பட்டங்கள் வென்ற அழகுராணி ஆவார்.[1][2] இவியான் 1.80 m (5'11") உயரமுடைய பண்ணுறவாண்மை மாணவர் ஆவார். தாம் ஒரு கன்னித்துறவி ஆகப்போவதாக கூறியுள்ளார்[3][4].அவரது எட்டாவது அகவையிலேயே தாய் தந்தையரை இழந்தமையால் கோயெடெசில் உள்ள கன்னிமடத்தில் கன்னித்துறவிகளால் வளர்க்கப்பட்டார். தமது எண்ணங்களை மாற்றிக்கொண்ட இவியான் விளம்பர உலகில் அழகிய தன் வடிவம் பெருமைகளையும் நல்ல தொழில்வாழ்க்கையையும் தரும் என்பதால் இத்துறைக்கு வந்துள்ளார்.
அழகுப் போட்டி வாகையாளர் | |
பிறப்பு | இவியான் லுனாசோல் சார்கோசு கோல்மெனரசு சூலை 26, 1989 குவானேர், போர்த்துகீசா, வெனிசுவேலா |
---|---|
உயரம் | 1.80 m (5 ft 11 in) |
தலைமுடி வண்ணம் | கறுப்பு |
விழிமணி வண்ணம் | கறுப்பு |
பட்ட(ம்)ங்கள் | அமேசான் அழகி 2010 வெனிசுவேலா அழகி 2010 உலக அழகி 2011 |
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- Miss Venezuela Official Website
- Miss World Official Website
- Miss Venezuela La Nueva Era MB
- Ivian Sarcos - Photo Gallery
முன்னர் Adriana Vasini |
Miss World Venezuela 2010-2011 |
பின்னர் Gabriella Ferrari |
முன்னர் Alexandria Mills |
Miss World 2011 |
பின்னர் ' |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.