இளையதம்பி தர்சினி

இளையதம்பி தர்சினி (1985 - 16.12.2005, புங்குடுதீவு) என்பவர் 2005, டிசம்பர் 16 ஆம் நாள் இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப் பெண் ஆவார்

நிகழ்வு

2005ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதியன்று, தர்ஷினி இளையதம்பி என்ற 20 வயதான இளம்பெண், புங்குடுதீவில் நிலைகொண்டிருந்த கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்ட பின் கடற்படை முகாமுக்கு அருகிலிருந்த பாழடைந்த கிணறொன்றினுள் சடலமாகப் போடப்பட்டிருந்தார். கொல்லப்படுவதன் முன், அவர் பலரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதற்கான தடயங்களை அவரது உடல் கொண்டிருந்ததாக வைத்தியசாலைச் சான்றிதழ் கூறுகிறது. உடலின் பல இடங்களில் நகக்கீறல்கள், பற்கடிகளும் காணப்பட்டிருந்ததுடன், அவரது ஒரு மார்பு மிக மோசமாகச் சிதைக்கப்பட்டிருந்தது. [1] [2] [3]

அரசு விசாரணை

இவற்றையும் பார்க்க

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. https://www.youtube.com/watch?v=KrxK1e1L3-I
  2. http://www.pearlaction.org/voices/Rape%20and%20murder%20of%20Ilaiyathamby%20Tharshini%20on%2016%20December%202005.pdf
  3. http://www.topix.com/forum/world/sri-lanka/TFN7M945R0LQJS60G
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.