இளங்கலை வணிகவியல்

இளங்கலை வணிகவியல் (Bachelor of Commerce) அல்லது சுருக்கமாக பி. காம் என்பது கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் வணிகவியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெறுவதை குறிப்பதாகும். இது இளங்கலை வணிகவியல் நிர்வாகம் (Bachelor of Commerce and Administration), அல்லது பிசிஏ எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் காமன்வெல்த் நாடுகளிலேயே இப்பட்டம் வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த பட்டமானது மூன்று ஆண்டுகள் அல்லது நான்கு ஆண்டுகள் முழுநேரப் படிப்பாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் மூன்று ஆண்டு படிப்பாக உள்ளது.

சிறப்புகள்

இந்தியாவில் வழங்கப்படும் சிறந்த பட்டப் படிப்புகளில் வணிகவியல் பட்டமும் ஒன்றாக திகழ்கிறது. இந்த படிப்பினை முடித்தால் வங்கித் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் போன்றவற்றை எழுதுவது சுலபம் என்பதால், தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்படிப்புக்கான மதிப்பு அதிகரித்துள்ளது. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பலரும் இந்த படிப்பினை முதன்மை விருப்பமாக தேர்ந்தெடுக்கின்றனர்.

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.