இளங்கலை

இளங்கலை (Bachelor of Arts, BA; ['பி.ஏ]) அல்லது இளங்கலைமானி என்பது கலைகள், அறிவியல் அல்லது இரண்டையும் கொண்ட படிப்புக்கு வழங்கப்படும் இளநிலைப் பட்டம் ஆகும். இளங்கலை படிப்பானது பொதுவாக நாடு, நிறுவனம் மற்றும் குறிப்பிட்ட சிறப்பு பட்டப்படிப்பைப் பொறுத்து மூன்று முதல் நான்கு ஆண்டுகள் கொண்ட படிப்பாக உள்ளது. baccalaureus என்ற சொல்லானது சில நாடுகளில் ஒன்று முதல் இரண்டு ஆண்டு கால இளங்கலை பட்டத்தைக் குறிக்கிறது (Baccalaureatus in Artibus Cum Honore). இதற்கு அளிக்கப்படும் பட்டயமானது பொதுவாக கல்வி நிறுவனத்தின் பெயர், நிறுவனத்தின் அதிகாரிகளின் கையொப்பங்கள் (பொதுவாக பல்கலைக்கழகத்தின் தலைவர் அல்லது கல்லூரியின் செயலாளர் அல்லது துறைத்தலைவர்), கொண்டதாகவும், பட்டத்தின் வகை போன்றவைக் குறிக்கப்பட்டதாக இருக்கும். பட்டயச் சான்றிதழானது பொதுவாக உயர்தர காகிதம் அல்லது காகிதத்தோல் மீது அச்சிடப்படுகின்றன.[1]

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.