இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 1978ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 22ஆம் திகதி அன்று உருவாக்கப்பட்டது. இது இலங்கையில் 1978ஆம் ஆண்டு உருவான பல்கலைக்கழக சட்டத்தின் 16 ஆம் விதியின் கீழ் இயங்குகிறது. கல்விக்கான அரச பொது நிதி ஒதுக்கீடுகளை உயர் கல்வி நிறுவனங்களுக்குப் பங்கிடுவதும், உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களை குறித்த முறைமைக்கு ஏற்ப வழி நடத்துவதும் பல்கலைக்கழகங்களில் பட்டப்பயில் கற்கை நெறிகளுக்கு அனுமதிப்பதற்கான மாணவர்களை தெரிவு செய்வதுமே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய பணியாகும். இலக்கம் 20, வார்டு இடத்தில் இதன் பணியகம் அமைந்துள்ளது.

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
சுருக்கம்UGC
உருவாக்கம்டிசம்பர் 22, 1978
நோக்கம்பல்கலைக்கழக கல்வி முறைமையை திட்டமிடலும் ஒழுங்கமைத்தலும் கல்வி நிறுவனங்களின் கல்வி தரத்தை உயர் தரத்தில் பேணுதலும்.
தலைமையகம்கொழும்பு
அமைவிடம்
ஆட்சி மொழி
சிங்களம், தமிழ், ஆங்கிலம்
Chairman
பேராசிரியர். காமினி சமரநாயக்க [1]
மைய்ய அமைப்பு
ஆணைக்குழு உறுப்பினர்கள்
சார்புகள்இலங்கை அரசாங்கம்
பணிக்குழாம்
200 மேல்
வலைத்தளம்http://www.ugc.ac.lk/

நோக்கம்

உள்நாட்டு உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி முறைமையின் உயர்தரத்தை உறுதிப்படுத்தலும், அனைத்துலக கல்வித் தரத்திற்கு ஏற்ப உருவாக்குவதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நோக்கம் ஆகும்.

செயல் திட்டம்

இலங்கையின் உயர்கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் தேசிய கல்வி வளத்தை பெருக்குவதும் உயர் கல்வி நிறுவனங்கள் வழியாக தகுதியுள்ள சிறந்த மனித வளத்தை உருவாக்கி ஆராய்ச்சி மற்றும் ஆளணியை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

பணிகள்

ஆணைக்குழுவின் முதன்மைச் செயற்பாடுகள்:

  • உயர் கல்விக்கான வளங்கள் மற்றும் நிதியை உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்குதல்.
  • பல்கலைக்கழக கல்வி முறைகளை திட்டமிடலும் மேற்பார்வை செய்தலும்.
  • கல்வித் தகுதிகளை மேற்பார்வை செய்தல்.
  • உயர் கல்வி நிறுவனங்களை மேலாண்மை செய்தல்
  • பட்டப்பயில் கற்கை நெறிகளுக்குச் சேர்ப்பதற்கான மாணவர்களை தெரிவு செய்வது.

ஆணைக்குழு உறுப்பினர்கள்

இதன் உறுப்பினர்கள் தலைவரால் நியமிக்கப்படுவர்:

  • பேரா. S. V. D. G. காமினி சமரநாயக்க -தலைவர்
  • பேரா. M. T. M. ஜிப்ரி - துணைத் தலைவர்
  • பேரா. கார்லோ பொன்சேகா - ஆணைக்குழு உறுப்பினர்
  • பேரா. ரோகன் ராஜபக்ச - ஆணைக்குழு உறுப்பினர்
  • பேரா. S. K. சிற்றம்பலம் - ஆணைக்குழு உறுப்பினர்
  • பேரா. S. B. S. அபயகோன் - ஆணைக்குழு உறுப்பினர்
  • வித்தியஜோதி பேரா. H. ஜனக தே சில்வா - ஆணைகுழு உறுப்பினர்

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்

தேசிய பல்கலைக்கழகங்கள்

உயர் கல்வி நிறுவகங்கள்

இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள்
இளநிலை பட்டப்படிப்புகள் மட்டும்
  • Institute of Technological Studies
  • Institute of Surveying and Mapping
  • Aquinas College of Higher Studies
  • National Institute of Social Development
  • National Institute of Business Management[2]

மேலதிக இணைப்பு

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவல் இணையதளம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.