எண்ணிம முறை

எண்ணிம முறை (Digital system) என்பது கருத்தளவில், 6 மரம், 8 விதை, 5 விரல் என்பது போல எண்ணிக்கையால் குறிக்கப்பெறும் முறை. இதற்கு மாறாக, நீர், பால் போன்றவற்றையோ, நீள அகலம் போன்றவற்றையோ தொடர்ச்சியாக மாறுபடும் அளவைப் பொருள்களாகக் கொள்ளலாம். இந்த எண்ணிம முறையில் பல வகைகள் உண்டு என்றாலும், அடிப்படையாக 0,1 என்று கருதப்படும் இரண்டின் அடிமானமாகிய இரும முறையே இன்று பெருவழக்காக உள்ளது. ஆங்கிலச் சொல் digital என்பது இலத்தீன் மொழியில் விரல் (finger) என்று பொருள்படும் digit என்பதில் இருந்து உருவானது.

ஒலி, ஒளி போன்று தொடர்ச்சியாக மாறும் பண்புகளையும், தக்கவாறு பகுத்துத் தோராயமாக எண்ணிம அளவாக மாற்றலாம். இப்படி எண்ணிமப் பொருளாக மாற்றுவதற்கு துளிகையாக்கம் (quantization) என்று பெயர். எடுத்துக்காட்டாக தொடர்ந்து மாறுபடும் ஒரு குறிப்பலையை எவ்வாறு துளிகையாக்கம் செய்து எண்ணிமப்படுத்தலாம் என்பதை அருகில் உள்ள படங்கள் விளக்கும்.

தொடர்ந்து மாறும் குறிப்பலை. இதனைச் சீராகப் பகுத்து துளிகையாக்கம் செய்து, எண்ணிமப்படுத்தலாம். கீழே அடுத்தப் படத்தைப் பார்க்கவும்
தொடர்ந்து மாறும் குறிப்பலையைச் சீராகப் பகுத்து துளிகையாக்கம் செய்து (quantization), எண்ணிமப்படுத்துவதைக் காட்டும். இதில் குறிப்பலையின் மதிப்பு, ஒவ்வொரு காலப் பகுதியிலும் மொத்தம் உள்ள 8 நிலைகளின் ஒன்றாக மட்டுமே இருக்கக்கூடும். இங்குள்ள குறிப்பலையைக் காலவரிசைப் படி இடமிருந்து வலமாக நகர்ந்தால் இச்சார்பின் மதிப்பு (உயரம்) 0,1,2,3,4,5,5,6,5,5,4,4,3,3,3,3.. என்று தொடர்கின்றது. இவற்றை இரும முறையில் 000, 001,010, 011,100.. என்றும் சுட்டி பதிவு செய்யலாம், அலைபரப்பலாம்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.