இறைமறுப்பாளர் மக்கள் தொகையியல்
இறைமறுப்பாளர் மக்கள் தொகையியல் என்னும் இக் கட்டுரை உலகில் இறைமறுப்பாளர் எண்ணிக்கை, மதிப்பீட்டு முறையியலில் உள்ள சிக்கல்கள், இறைமறுப்பாளர்களின் பின்புலம் ஆகியவற்றை விபரிக்கும். உலகில் எத்தனை பேர் இறைமறுப்பாளர் என்று துல்லியமாக கணிப்பது கடினமாகும். இறைமறுப்பு, அறியாமைக் கொள்கை, மனிதநேயம், உலகாயதம், ஐயுறவுக்கொள்கை அகிய தொடர்புள்ள கொள்கைள் உடையோர் எல்லோரும் இறைமறுப்பாளர் என்ற வகைக்குள் வரார். இறைமறுப்பு பல நாடுகளில் சட்டத்துக்கு புறம்பானது, மரணதண்டனைக்கும் உரியது எனவே வெளிப்படையாக இறைமறுப்பாளர் என்று ஒத்துக்கொள்வது சிக்கலானது. உலகில் 12-15 % மக்கள் இறைமறுப்பாளர்கள் எனப்படுகிறது.[1] எனினும் இந்த எண்ணிக்கை இதவிடக் கூடுதலாக இருக்கும்.
அறிவியலாளரும் இறைமறுப்புக் கொள்கையும்
ஐக்கிய அமெரிக்க தேசிய அறிவியல் சங்கம் நடத்திய கருத்தாய்வின் படி ஆக 7% அறிவியலாளர்களே கடவுள் நம்பிக்கை உடையோர்கள். 72.2% கடவுளை நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. 20.8% அறியாமைக் கொள்கை உடையோர். உயிரியல் அறிவியாளர்களிடையே வெறும் 5.5% வீதமானர் மட்டுமே கடவுள் நம்பிக்கை உடையோராக இருந்தனர்.[2] அமெரிக்க்க பெரும்பான்மை பொதமக்கள் சமய நம்பிக்கை உடையோர் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது.