இறாத்தல்

பவுண்டு (pound, lb, இறாத்தல்) என்பது எடையைக் குறிக்கும் ஒரு அலகு ஆகும். இது ஒரு பிரித்தானியப் பேரரசிய (இம்பீரியல்) அலகு என்றாலும், இன்றைய காலத்தில் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. முந்தைய காலத்தில் பல வகையான பவுண்டுகள் இருந்தாலும், ஒரு பவுண்டு என்பது பொதுவாக 0.453 592 37 கிலோகிராம் என்று தரப்படுத்தப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் சுருக்கமாக lb என்று வழங்கப்படும். இது எடையைக் குறிக்கும் உரோம, இலத்தீனிய சொல்லாகிய libra pondo என்பதன் சுருக்கமாகும்.

இந்தக் கட்டுரை எடை பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, பிரித்தானிய பவுண்டு என்பதைப் பாருங்கள்.

எடையைக் குறிக்க மட்டுமல்லாமல், இது நிறையையும் (mass) குறிக்க உதவும். அதனைப் பவுண்டு நிறை என்று வழங்குவர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.