இரும்பு-நிக்கல் உலோகக்கலவை
இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய இரண்டு தனிமங்கள் பெரும்பான்மையாகக் கலந்துள்ள கலவைக்கு இரும்பு-நிக்கல் உலோகக்கலவை அல்லது நிக்கல்-இரும்பு உலோகக்கலவை (Iron–nickel alloy) என்று பெயர். இதை இரும்பு-நிக்கல் கலப்புலோகம் எனவும் அழைக்கலாம். FeNi மற்றும் NiFe என்பது இரும்பு-நிக்கல் உலோகக்கலவையின் சுருக்கம். NiFe என்ற சொற்றொடர் நிக்கல்-இரும்பு உலோகக்கலவையில் வினையூக்கியில் ஏற்படும் வேதிவினைகளை விளக்க உதவுகிறது. மேலும், இந்த NiFe புவியியலில் புவியின் கருவம் மற்றும் கோள்களின் கருவத்தை விளக்க உதவும்.

புவியியல் மற்றும் வானியல்
விண்மீன்சார் அணுக்கருச் சிதைவின் போது, கடைசியாக உருவாகும் தனிமம் இரும்பும், நிக்கலும் ஆகும். இதன் காரணமாக, இந்த இரண்டு தனிமங்கள் உருவாக மீயொளிர் விண்மீன் வெடிப்பு தேவையில்லை. எனவே தான் புவியின் கருவத்திலும், விண்கற்களிலும் இந்த இரண்டு தனிமங்கள் அதிகமாக உள்ளன. நிக்கல்-இரும்பு உலோகக்கலவை புவி மற்றும் விண்கற்கள் சார்ந்த கலப்புலோகம் என்பதால் இவை புவியில் இயற்கையாகவே கிடைக்கிறது.
வேதியியல் மற்றும் தொழில்நுட்பம்
இரும்பு (அணு எண் 26) மற்றும் நிக்கலின் (அணு எண் 28) ஈர்ப்புத்தன்மை காரணமாக, இரும்பு-நிக்கல் உலோகக்கலவை இயற்கையாகவே நிகழ்கிறது. தொழிற் துறை கலப்புலோகம் வணிக நோக்கத்தோடு, அதிக எண்ணிக்கையில் மற்றும் தேவைக்கு ஏற்ப சிக்கலான அணுப்பிணைப்பில் வேதி வினையூக்கிகளின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது.
எஃகு தொழில்நுட்பத்தில் இரும்பு மற்றும் நிக்கல் கலக்கப்பட்டு மீவலி தாழ்கரிம எஃகு (maraging steel) மற்றும் குறைக் கலவை எஃகு (low alloy steel) தயாரிக்கப்படுகிறது. மேலும், மற்ற தொழில்நுட்பத்தில் இன்வார் மற்றும் மியூவுலோகம் (mu-metal) தயாரிக்கப்படுகிறது.
கண்ணோட்டம்
பின்வரும் அட்டவணை வெவ்வேறு இரும்பு-நிக்கல் உலோக கலவைகளின் ஒரு கண்ணோட்டம். இயற்கையாகவே உருவாகும் கலவைகள் ஒரு வகை கனிமங்கள் ஆகும். இவை இயற்கை உலோகங்கள் என அழைக்கப்படுகிறது. சில தனிமங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட படிக அமைப்புகளை கொண்டுள்ளன (எ.கா. விண்கல் இரும்பு இரண்டு படிக கட்டமைப்புகளின் கலவையாகும்).
பெயர் | விளக்கம் | வேதி வாய்பாடு / இரும்பின் எடை சதவிகிதம் |
---|---|---|
Antitaenite | விண்வீழ்கலில் உள்ள இயற்கை உலோகம். | Fe3Ni[1] |
Austenite | நிக்கல் நிலைப்படுத்தப்பட்ட ஒரு தனித்துவமான இரும்பின் மாற்றுரு (allotrope). | |
Awaruite | விண்வீழ்கலில் உள்ள இயற்கை உலோகம். | Ni2Fe to Ni3Fe |
புவியின் உட் கருவம் | புவியின் உட் கருவம் இரும்பு-நிக்கல் உலோகக்கலவையினால் ஆனது. | about 5.5%[2] |
Elinvar | வெப்ப நிலையைப் பொருத்து மீள்திறன் மாறாத ஒரு எஃகு | 36% ( இதில் 5% குரோமியமும் உண்டு.) |
இன்வார் | மிக குறைந்த வெப்ப விரிவாக்கம் உடைய ஒரு எஃகு. | 36% |
Kamacite | விண்கல் இரும்பில் உள்ள இயற்கை உலோகம். | Fe0.9Ni0.1 |
மீவலி தாழ்கரிம எஃகு | வலிமையான எஃகு ]] | 15 to 25% |
விண்கல் இரும்பு | பெருமளவு kamacite மற்றும் taenite மற்றும் மிகச் சிறிய அளவு tetrataenite, antitaenite மற்றும் awaruiteகலந்த கலவை. | 5–30% |
மியூவுலோகம்(mu-metal) | அதிக காந்த உட்புகு திறன் உடைய ஒரு எஃகு. | 77% |
கோள்களின் கருவகம் | புவி, நிலா மற்றும் கோள்களின் கருவானது இரும்பு-நிக்கல் உலோகக்கலவையினால் ஆனது. | பல்வேறு |
Taenite | விண்கல் இரும்பில் உள்ள இயற்கை உலோகம். | NiFe |
Telluric iron | புவியில் உள்ள இயற்கை உலோகம். | Fe ( 0.05 முதல் 4% வரை நிக்கல் உள்ளது) |
Tetrataenite | விண்கல் இரும்பில் உள்ள இயற்கை உலோகம். | FeNi |
குறிப்பு
- "Mindat Antitaenite". Mindat. பார்த்த நாள் 9 January 2013.
- Lin, Jung-Fu (1 January 2002). "Iron-Nickel alloy in the Earth's core". Geophysical Research Letters 29 (10). doi:10.1029/2002GL015089. Bibcode: 2002GeoRL..29.1471L.
வார்ப்புரு:Alloy-stub
வார்ப்புரு:Petrology-stub