இருங்கோவேள்

இருங்கோவேள் பாரிமகளிரை மணந்துகொள்ள மறுத்தவன் [1]
வடபால் முனிவன் தடவினில் தோன்றி, செம்புக்கோட்டை துவரையை ஆண்டு, 49 வழிமுறை வந்த வேளிருள் வேள் என்று புகழப்படுகிறான்.[2]
சோழன் கரிகாலன் இருங்கோவேளை வீழ்த்தினான் [3]
இருங்கோ வேண்மான் தலையாலங்கானப் போரில் நெடுஞ்செழியனை எதிர்த்த எழுவரில் ஒருவன் [4]

இருக்குவேள் அரசர்கள்

இருக்குவேள் அரசர்கள் இருங்கோவேளின் வழிவந்தவர்கள் என்றும் இரு மரபினரும் வெவ்வேறு என்று மாற்றுக்கருத்துகள் ஆய்வாளர்களிடையே நிலவுகின்றன. இருக்குவேள் அரசரும் இருங்கோவேள் அரசரும் ஒருவரே என்று ஆரோக்கியசாமி தம்முடைய நூலில் கூறுகிறார்.[5] ஆனால் சங்க காலத்தில் இருந்த இருங்கோவேள் அரசருக்கும் பிற்காலத்தில் இருந்த இருக்குவேள் அரசருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. அவர்கள் வேறு; இவர்கள் வேறு. பெயர்களில் காணப்படுகின்ற ஒற்றுமை பற்றி இருவரையும் ஒருவராக ஊகிப்பது கூடாது என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.[6]

சான்று மேற்கோள்

  1. கபிலர் புறம் 202
  2. கபிலர் புறம் 201
  3. பட்டினப்பாலை 282
  4. நக்கீரர் அகம் 36
  5. M. Arokiaswamy, The Early History of the Vellar Basin
  6. பண்டைத் தமிழக வரலாறு களப்பிரர் - துளு நாடு, பக்கம் 72
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.