இராமலிங்க விலாசம்
இராமலிங்க விலாசம் என்பது இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் வடகிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அரண்மனையின் பெயராகும். இந்த அரண்மனை 1674–1710 ஆம் ஆண்டுகளுக்கிடையில் இப்பகுதியை ஆண்ட இரகுநாத சேதுபதி [1] என்கிற "கிழவன் சேதுபதியால்" கட்டப்பட்டது. [2] [3] இந்த அரண்மனையிலிருக்கும் மண்டபத்திற்கு இராமலிங்க விலாச தர்பார் என்று பெயர். இந்த மண்டபத்தில் தஞ்சாவூர் மராட்டிய அரசர்களின் ஐரோப்பியத் தொடர்புகள் பற்றிய சுவரோவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த அரண்மனையில் இராமகிருட்டிண பரமஅம்சரின் சீடரான விவேகானந்தர் 1886 ஆம் ஆண்டில் நடைப்பயணமாக வந்த பொழுது தங்கியுள்ளார். தற்போது இங்கு தொல்பொருள் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.[4]

இராமலிங்க விலாசம்
மேற்கோள்கள்
- Jeyaraj, V., Directory of Monuments in Tamilnadu, Director of Museum, Government of Tamilnadu, Chennai, 2005, p.158
- இராமலிங்க விலாசம்
- இராமலிங்க விலாசம் அருங்காட்சியகம் – geoview.info இணையத் தளத்தில்.
- இராமலிங்க விலாசம் அரண்மனை
இவற்றையும் காண்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.