இராபர்ட்டு கேட்சுபி
இராபர்ட்டு கேட்சுபி (Robert Catesby, பிறப்பு மார்ச்சு 3, 1572 முன்பில்லை, இறப்பு நவம்பர் 8, 1605) 1605ஆம் ஆண்டில் தோல்வியில் முடிந்த வெடிமருந்து சதித்திட்டத்தை தீட்டிய ஆங்கில கத்தோலிக்க குழுவின் தலைவராக இருந்தவர்.
இராபர்ட்டு கேட்சுபி | |
---|---|
![]() இராபர்ட்டு கேட்சுபி, 1794 | |
விவரங்கள் | |
பெற்றோர் | வில்லியம் & ஆன் கேட்சுபி |
பிறப்பு | மார்ச்சு 3, 1572 அல்லது பின்னர் புஷ்வுட் ஹால், என்லி-இன்-ஆர்டென், வார்விக்சையர், இங்கிலாந்து |
துணை(கள்) | காத்தரீன் லே |
குழந்தைகள் | வில்லியம், இராபர்ட் |
பிற பெயர்(கள்) | மிஸ்டர் ராபர்ட்சு, ராபின் கேட்சுபி |
Plot | |
பங்கு | தலைவர் |
அபராதம் | புதைத்தது அகழல், தலை வெட்டுதல் |
இறப்பு | நவம்பர் 8 1605 (அகவை 32–33) ஓல்பெக் குடும்பம், இசுடபர்டுசையர், இங்கிலாந்து |
காரணம் | சுடப்பட்டு |
வார்விக்சையரில் பிறந்தகேட்சுபி அருகிலுள்ள ஆக்சுபோர்டில் கல்வி கற்றார். அவரது குடும்பம் முதன்மையான ஆங்கிலத் திருச்சபைக்கு எதிரான கத்தோலிக்கர்கள். அக்காலத்தில் பல்கலைக்கழகத்தில் படிப்பதாயிருந்தால் மன்னரே இங்கிலாந்து திருச்சபையின் முதன்மையானவர் என்று உறுதிமொழி (Oath of Supremacy) எடுக்க வேண்டியிருந்தது. ஆங்கிலத் திருச்சபையை எதிர்த்ததால் இந்த உறுதிமொழியை எடுக்க விரும்பாது பட்டப்படிப்பை முடிக்காமலே கல்லூரியை விட்டார். 1593இல் அவர் சீர்திருத்த திருச்சபைப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர் மூலம் இரண்டு ஆண் மகவுகளையும் பெற்றார். தனது தந்தையும் மனைவியும் இறந்த பின்னர் மீண்டும் கத்தோலிக்கத்திற்குத் திரும்பினார். 1601இல் எசெக்சு புரட்சியில் பங்கேற்றார். அதனால் சிறை பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டார்.