இரா. வை. கனகரத்தினம்

இரா. வை. கனகரத்தினம் (ஆகத்து 23, 1946 - 24 மே 2016) இலங்கைத் தமிழ் பேராசிரியரும், ஆய்வாளரும், எழுத்தாளரும் ஆவார். சைவ சமயம், நாட்டுப்புற இலக்கியம் ஆகிய துறைகளில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் எழுதி வெளியிட்டுள்ளார்.[1][2]

பேராசிரியர் இரா. வை. கனகரத்தினம்
பிறப்புஇராமநாதர் வைத்திலிங்கம் கனகரத்தினம்
ஆகத்து 23, 1946(1946-08-23)
நெடுந்தீவு, இலங்கை
இறப்புமே 24, 2016(2016-05-24) (அகவை 69)
யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விமுதுகலை (கொழும்புப் பல்கலைக்கழகம்)
இளங்கலை (கொழும்புப் பல்கலைக்கழகம், 1968)
பணிபேராசிரியர்
பணியகம்பேராதனைப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதமிழ்ப் பேராசிரியர், நூலாசிரியர்
சமயம்இந்து
பெற்றோர்சிவகாமிப்பிள்ளை
இராமநாதர் வைத்திலிங்கம்

ஆரம்ப வாழ்க்கை

யாழ்ப்பாண மாவட்டம், நெடுந்தீவில் இராமநாதர் வைத்திலிங்கம், சிவகாமிப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்த கனகரத்தினம் நெடுந்தீவு கோட்டைக்காடு மகேசுவரி வித்தியாசாலை, நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாசாலை, யாழ்ப்பாணம் முத்துத்தம்பி வித்தியாசாலை, செங்குந்த இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். 1968 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், பின்னர் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[1]

பணி

1975 முதல் 1980 வரை களனிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1980 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து, 1999 இல் தமிழ்த் துறைப் பேராசிரியரானார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.[1]

வெளியிட்ட நூல்கள்

  • ஈழ நாட்டில் புராண படனச் செல்வாக்கு (1985)
  • நாவலர் உரைத்திறன் (1997)
  • நாவலர் மரபு (1999)
  • பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் புலமையியல்: ஓர் ஆய்வு (2004)
  • ஈழத்துச் சைவ சமய வளர்ச்சியில் சித. மு. பசுபதிச் செட்டியாரின் பங்களிப்பு (2005)
  • ஆறுமுகநாவலர் வரலாறு - ஒரு ப்திய பார்வையும் பதிவும் (2007)
  • நாவலர் ஆளுமையும் புலமைத்துவமும் (2007)
  • ஆறுமுக நாவலர் வரலாறு ஒரு சுருக்கம் (2008)

விருதுகள்

  • 1995 - சாகித்திய மண்டல விருது
  • 1996 - இந்துசமயப் பண்பாட்டு கலாச்சார அமைச்சின் விருது
  • 2007 - சம்பந்தர் விருது

மறைவு

பேராசிரியர் இரா. வை. கனகரத்தினம் யாழ்ப்பாணத்தில் சாலை விபத்து ஒன்றில் சிக்கி யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 2016 மே 24 செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானார்.[1][3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.