இரண்டாம் விஜயபாகு

பண்டித விஜயபாகு (கி.பி. 1186 - 1187 ஆட்சிக் காலம்) எனப்பெயர் பெற்ற இரண்டாம் விஜயபாகு பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்தவன். பராக்கிரமபாகு மன்னனின் இறப்பைத் தொடர்ந்து, அவனது சகோதரியின் மைந்தனும் அறிவு மிக்க புலவனுமான இரண்டாம் விசயபாகு ஆட்சியிலமர்ந்தான்.[1]

கலிங்க மாகனின் படையெடுப்பின் பின்னர் புத்தரின் தந்த தாதுக்கள் மத்திய மலை நாட்டின் கொத்மலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இவன் அவற்றை பெலிகலை மலையுச்சியில் ஒரு கட்டிடத்திற் பாதுகாப்பாக வைத்தான்.[2] இவன் தனது தாய் மாமனான மகா பராக்கிரமபாகுவினால் பர்மாவின் ராமஞ்ஞ மன்னனுக்கெதிராகப் போர் தொடுக்கப்பட்ட பின்னர் இரு நாடுகளுக்குமிடையில் நிலவிய பகைமையை மாற்றி, நல்லுறவை ஏற்படுத்தினான்.[3]

இரண்டாம் விசயபாகு மன்னன் பர்மாவின் அரிமத்தானா மன்னனுக்கு மகத மொழியில், அஃதாவது பாளி மொழியில் ஒரு கடிதமெழுதியதாகக் கூறப்படுகிறது. இவன் ஏராளமான சிறைக் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தான். ஓராண்டு காலம் மட்டுமே ஆட்சியிலிருந்த இம்மன்னன் மிகிந்து என்பவனின் சதியினாற் கொல்லப்பட்டான்.[4]

உசாத்துணை

  • க. தங்கேஸ்வரி (ப - 94) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.