இரண்டாம் நரசிம்ம ராயன்
இரண்டாம் நரசிம்ம ராயன் விஜயநகரப் பேரரசின் சாளுவ மரபின் முதல் அரசனான சாளுவ நரசிம்ம தேவ ராயனின் இரண்டாவது மகனாவான். தந்தைக்குப் பின் அரியணை ஏறிய இவனது தமையனான திம்ம பூபாலன் குறுகிய காலத்திலேயே கொலையுண்டதைத் தொடர்ந்து வயதில் இளையவனாய் இருந்த இவனுக்கு முடி சூட்டப்பட்டது. எனினும், இவனது தந்தையான சாளுவ நரசிம்ம ராயனின் கீழ் விசுவாசமான தளபதியாக இருந்த துளுவ நரச நாயக்கன் இவன் சார்பில் ஆட்சியை நடத்திவந்தான்.
விஜயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
இரண்டாம் நரசிம்ம ராயன் உண்மையில் காவலில் வைக்கப்பட்டு இருந்ததாகவே கருதப்படுகிறது. 1503 ஆம் ஆண்டில் துளுவ நரச நாயக்கன் தனது பொறுப்புக்களைத் தனது மகனான வீரநரசிம்ம ராயனிடம் ஒப்படைத்தான். இவனும் ஒரு பேரரசன் போலவே நிர்வாகத்தை நடத்திவந்தான். 1505 ஆம் ஆண்டில் காவலில் வைக்கப்பட்டிருந்த பெனுகொண்டா என்னுமிடத்தில் கொல்லப்பட்டான். இதனைத் தொடர்ந்து வீரநரசிம்ம ராயன் தானே விஜயநகரப் பேரரசின் அரசனாக முடிசூடிக் கொண்டான்.[1]