உருசியாவின் ஆறாம் இவான்

ஆறாம் இவான் அந்தோனொவிச் (Ivan VI Antonovich of Russia (Ivan Antonovich; உருசியம்: Иван VI; Иван Антонович; ஆகத்து 23 [யூ.நா. ஆகத்து 12] 1740சூலை 16 [யூ.நா. சூலை 5] 1764), இரசியப் பேரரசின் அரசனாக 1740 ஆம் ஆண்டில் 2 மாதக் குழ்ந்தையாக இருகும் போது அறிவிக்கப்பட்டான். ஆனாலும் இவன் பேரரசனாக முடிசூடவில்லை. ஓராண்டுக்குள்ளேயே முதலாம் பீட்டரின் மகள் எலிசபெத்தினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டுச் சிறைப் பிடிக்கப்பட்டான். இவான் தனது இறுதிக் காலம் முழுவதும் சிறையிலேயே கழித்தான். 1764 ஆம் ஆண்டில் தனது 23வது அகவையில் இவனைச் சிறையில் இருந்து விடுவிக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சியில் சிறைக் காவலாளிகளால் குத்திக் கொலை செய்யப்பட்டான்.

ஆறாம் இவான்
Ivan VI
இரசியாவின் பேரரசரும் சர்வாதிகாரியும்
ஆட்சிக்காலம் 28 அக்டோபர் 1740 - 6 டிசம்பர் 1741 (1 ஆண்டு 39 நாட்கள்)
முடிசூடல் 28 அக்டோபர் 1740
(2 மாதங்கள் 5 நாட்கள்)
முன்னையவர் அன்னா
பின்னையவர் எலிசபெத்
முழுப்பெயர்
இவான் அண்டோனவிச்
குடும்பம் ரொமானொவ் மாளிகை
தந்தை பிரன்ஸ்விக்கின் இளவரசர் அந்தோனி உல்ரிக்
தாய் அன்னா லெப்பல்தோவ்னா
பிறப்பு ஆகத்து 23, 1740(1740-08-23)
சென் பீட்டர்ஸ்பேர்க்
இறப்பு 16 சூலை 1764(1764-07-16) (அகவை 23)
சிலிசெல்பேர்க்
அடக்கம் சிலிசெல்பேர்க்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.