இயற்கை வளிமம்

நிலத்தின் அடியிலிருந்து தானாக இயற்கை மாறுபாடுகளால் அல்லது பெட்ரோலிய நிலவியல் காராணமாக வெளிப்படும் எரிவளிமம் இயற்கை வளிமம் எனப்படும்.[1] இவை எளிதில் கனற்சியுறும் தன்மை கொண்டவை. இருப்பினும் தீப்பற்றாக் கலவைகளான கார்பன் டை ஆக்சைடு ,நைட்ரஜன்,ஹீலியம் போன்றவையும் இருக்கின்றன. கேசொலினை உலர்வளிமம், ஈரவளிமம் என்று வகைப்படுத்துவர். இந்த இயற்கை வளிமம் தூய்மையாகவும் எளிதில் கொண்டு செல்ல தக்கதாகவும், உயர் வெப்ப அளவினைக் கொண்டாதாகவும், அதிக வெப்பநிலையுடையதாகவும் இருக்கும். இதனை எளிதில் பயன்படுத்தலாம்.

மேற்கோள்கள்

  1. புத்தகம் -அறிவியல் களஞ்சியம் தொகுதி 6 தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு;63-6,திசம்பர் 1988 பக்கம் 292 ஆசிரியர் கே.ஆர்.கோவிந்தன்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.