இமாம் ஷாமில்

இமாம் ஷாமில்(ஆங்கிலம்:Imam Shamil) (26 ஜூன் 1797-4 பெப்ரவரி 1817) (சாமீல் என உச்சரிக்கப்படுகின்றது) ஸாமய்ல்,சாமில் மற்றும் சாமீல் எனவும் அழைக்கப்படுகின்றார்.இவர் வடக்கு கவ்காசஸ், இன்றைய செச்னியாவின் அவார் இனக்குழுவைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல் மற்றும் சமயத் தலைவராக இருந்தவர். அவர் நக்ஷபந்தியா சூபி வலையமைப்பின் ஒரு ஆன்மிக வழிகாட்டியும் ஆவார். கவ்காஸ் யுத்தத்தின் போது ரஷ்ய எதிரப்புப் படையின் தலைவராகவும், கவ்காஸ் இமாமத்தின் (1834-1859) மூன்றாவது இமாமாகவும் இருந்தவர்.[1]

இமாம் ஷாமில்
கவ்காஸ் இமாமத்
ஆட்சிக்காலம் 1834 - 1859
முன்னையவர் கஸ்மத் பேக்
பின்னையவர் ரஷ்ய பேரரசு கவிழ்க்கப்பட்டது
தந்தை டேன்காவு
பிறப்பு 26 ஜூன் 1797
கிம்ரி, தாகெஸ்தான், அவர் கெனட்
இறப்பு 4 பெப்ரவரி 1871(1871-02-04) (அகவை 73)
மதீனா, ஹிஜாஸ், உதுமானிய பேரரசு
அடக்கம் ஜன்னதுல் பக்கி, மதீனா, ஹிஜாஸ், உதுமானிய பேரரசு (நவீன கால சவுதி அரேபியா)
சமயம் சுன்னி இஸ்லாம்
தஸவ்வுப்

குடும்பம் மற்றும் ஆரம்ப வாழ்க்கை

இமாம் ஷாமில் 1797இல் கிம்ரியின் அவல் கிராமத்தில் பிறந்தார். இது இன்றையை ரஷ்யாவின்,தாகெஸ்தானில் அமைந்துள்ளது.அவரது இயற்பெயர் அலி, எனினும் பின்னர் அவரது பெயர் மாற்றப்பட்டது.அவரது தந்தை டேன்காவு ஓர் நிலப்பிரவு. அவரது தந்தையின் பதவியின் காரணமாக, இமாம் ஷாமில் அவரது நெருங்கிய நண்பர் காஸி முல்லாவுடன் அரபு மற்றும் தரக்கவியல் போன்ற பல விடயங்களை கல்விகற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.இமாம் ஷாமில், அல்குர்ஆன் மற்றும் ஹதீஸை நன்றாகப்படித்த மதிக்கப்படக்கூடியவராக காணப்பட்டார்.

இமாம் ஷாமில் அவர்கள் பிறந்த காலப்பகுதயில் ரஷ்யப் பேரரசு, உதுமானியப் பேரரசுக்குள் தனது அரசின் நிலப்பரப்பை விரிவுபடுத்திக்கொண்டிருந்தது. ரஷ்ய படையெடுப்பினால், பல கவ்காசஸ் நாடுகள் ஒன்றுபட்டு ரஷ்யாவின் படையெடுப்புக்களை எதிரத்துவந்தது இது கவ்காசஸ் போர் என அறியப்படுகின்றது.கவ்காசஸ் ரஷ்ய எதரிப்பு படையின் ஆரம்ப தலைவர்களாக செயக் மன்சூர் மற்றும் காஸி முல்லா ஆகியோர் இருந்தனர்.ஷாமிலின் சிறுபராய நண்பராக காஸி முல்லா இருந்தார். பின்னர், காஸி முல்லாவின் சீடராகவும், ஆலோசகராகவும் மாறினார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.