இமாம் மாலிக்

மாலிக் இப்னு அனஸ் (Mālik ibn Anas ) (அரபு மொழி: مالك بن أنس; அல்லது இமாம் மாலிக் அரபு நாட்டு இஸ்லாமிய அறிஞர், குறிப்பாக முஹதீத் ( ஹதீஸ் கலை அறிஞர் ) ஆவார்.[1] இவர் சுன்னா இசுலாமிய பிரிவை சார்ந்தவர். இமாம் ஷாபி எனும் இவரது மாணவர் கூற்று படி இவர் ஒரு நட்சத்திரத்தை போன்ற அறிவில் பரந்து விளங்கியவர்.[2] இசுலாமிய சுன்னா பிரிவான மாலிகி மத்ஹப் இவர் பெயரால் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

இசுலாமிய அறிஞர்
மாலிக் பின் அனஸ்
இசுலாமிய எழுத்தணிக்கலை முறையில் மாலிக் பின் அனஸ்
பிறப்பு93 இ.நா (கி.பி. 711)
மதீனா
இறப்பு179 இ.நா (கி.பி. 795)
மதீனா
இனம்அரபி
காலம்உமையா கலீபகம்
பிராந்தியம்மதீனா
முதன்மை ஆர்வம்ஹதீஸ், பிக்ஹ்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கரு
மாலிகி மத்ஹப்
ஆக்கங்கள்முஅத்தா, முதவானா

பிறப்பு

இமாம் மாலிக் 93 இ.நா (கி.பி. 711) வருடத்தில் மதீனா நகரில் பிறந்தார். இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை பெயர் அனஸ் பின் மாலிக்.[3]

ஆசிரியர்கள்

தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது. நாஃபிஃ, ஹிஷாம் பின் உர்வா, யஹ்யா பின் சயீத், அப்துல்லாஹ் பின் தீனார், சைத் பின் அஸ்லம், முஹம்மத் பின் முஸ்லிம், அப்துல்லாஹ் பின் அபீபக்கர், சயீத் பின் அபீ, இப்னு சிஹாப் ஆகியோர் இவருடைய ஆசிரியர்கள்.[4]

மாணவர்கள்

இமாம் அபூஹனீபா, சுஃப்யான் சவ்ரீ, அல்லைஸ் பின் சஃத், ஷுஃபா, அப்துல் மலிக், மஃமர் பின் ராஷித், யஹ்யா பின் சயீத், இப்னுல் முபாரக், வகீஃ மற்றும் இமாம் ஷாபி ஆகியோர் இவருடைய மாணவர்கள்.

நம்பகமான ஹதீஸ் தொகுப்பு

இமாம் மாலிக் ஹதீஸ் தொகுப்புகளில் அறிவிப்பாளர் வரிசை தொய்வின்றி நம்பகமான தகவல்கள் இருக்கும்.[5]

இவரது படைப்புகள்

  • முஅத்தா இமாம் மாலிக்
  • முஅத்தா அல் குப்ரா

இறப்பு

இமாம் மாலிக் அடக்கத்தலம்

இமாம் மாலிக் 83 ஆம் வயதில் இ.நா 179 ( கி.பி. 795) இல் மதீனாவில் இறந்தார்.

மேற்கோள்கள்

  1. "Malik ibn Anas ibn Malik ibn `Amr, al-Imam, Abu `Abd Allah al-Humyari al-Asbahi al-Madani". Sunnah.org. பார்த்த நாள் 2010-04-10.
  2. "The Life and Times of Malik ibn Anas". Islaam.Com. பார்த்த நாள் 2010-04-10.
  3. M M Azami, The History of the Quranic Text, page 100-101
  4. "– Topics". Muslimheritage.com (2005-01-04). பார்த்த நாள் 2010-04-10.
  5. ""Imaam Maalik ibn Anas" by Hassan Ahmad, ''‘Al Jumuah’ Magazine'' Volume 11 – Issue 9". Sunnahonline.com. பார்த்த நாள் 2010-04-10.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.