இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 (Indian Airlines Flight 814) பொதுவாக ஐ.சி 814 (IC 814) என்று அழைக்கப்படும். இது நேபாளுக்கும் இந்தியாவிற்கும் இடையே செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகும். இந்த விமானம் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தியதி வெள்ளிக் கிழமை 178 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்களுடன் கடத்தப்பட்டது. இதை பாகிஸ்தானில் இயங்கும் ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதக் குழு கடத்தியிருந்தது. இந்தக் கடத்தல் 7 நாட்கள் நீடித்தது. பின்னர் இந்தியச் சிறையில் இருந்த முஷ்டாக் அஹமது சர்கார், அஹமது ஒமர் சையது ஷேக் மற்றும் மெளலானா மசூத் அசார் ஆகியத் தீவிரவாதிகளை விடுவித்தனர். கடத்தப்பட்ட விமானம் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் விமான நிலையத்தில் கடத்தல்காரர்கள் தரையிறக்கி வைத்திருந்தனர். இவ்விமானம் கடத்தப்பட்ட பின்னர் இந்தியாவின் அமிர்தசரஸ் விமான நிலையம், பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையம், ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் துபாய் ஆகிய விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டது. இக்கடத்தலில் 17 பயணிகள் காயமடைந்தனர். ரூபின் காட்யால் என்பவர் மரணமடைந்தார்.

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814
கடத்தல் சுருக்கம்
நாள்24 டிசம்பர் 1999 1 ஜனவரி 2000
வகைப்பாடுவிமானக் கடத்தல்
பயணிகள்178
ஊழியர்15
காயமுற்றோர்17
உயிரிழப்புகள்1
தப்பியவர்கள்177
இயக்கம்இந்தியன் ஏர்லைன்ஸ்
வானூர்தி பதிவுVT-EDW
பறப்பு புறப்பாடுநேபாளம்
சேருமிடம்தில்லி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.