இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (Indian Agricultural Research Institute) - ஐ.ஏ.ஆர்.ஐ, இந்தியாவின் முதன்மை வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி அமைப்பாகும்.


1905ல் பீகார் மாநிலம் புசா என்ற இடத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ஐ.ஏ.ஆர்.ஐ) அமெரிக்க வள்ளல் ஹென்ரி பிலிப்ஸ் என்பவரது கொடையால் தொடங்கப்பட்டது. பீகார் நிலநடுக்கத்தால் பதிப்படைந்த இக்கழகம் 1936ல் டெல்லிக்கு மாற்றப்பட்டது.
இந்தியாவின் வேளாண் வளர்ச்சியில் நெருங்கிய தொடர்புடைய இக்கழகம் நூறாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி மற்றும் கல்விப்பணி புரிகிறது. பசுமைப் புரட்சிக்கு வித்திட்டது இக்கழகமேயாகும். அதிக மகசூல் தரும் பயிர் வகைகளை தயாரித்து தரப்படுத்தியது.
1958ல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அனுமதி வழ்ங்கி இந்திய பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பும், முனைவர் பட்டப்படிப்பும் வழங்கிவருகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின்(ICAR) நிதியுதவியாலும் நிர்வாகத்தாலும் நடத்தப்படுகிறது.