இந்திய நாகம்
இந்திய நாகம், இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் நச்சுப் பாம்பாகும். ஏனைய நாகப் பாம்பினங்களைப் போலவே இந்திய நாகமும் எதிரிகளைத் தாக்கத் தயாராகும் போது எழுந்து படமெடுக்கும். இவை எறத்தாழ இரண்டு மீற்றர் நீளம் வரை வளரக் கூடியன. ஏப்ரல் முதல் ஜூலை மாதங்களுக்கிடையில் இவை முட்டை இடுகின்றன. ஒரு முறையில் 12 முதல் முப்பது முட்டைகள் இடப்படுகின்றன. இம்முட்டைகள் 48 முதல் 69 நாட்களில் பொரிக்கின்றன. பிறக்கும்போது 20 முதல் 30 சென்ரி மீற்றர் நீளமுடையனவாக இருக்கும் நாக பாம்புக் குட்டிகளது நச்சுப் பைகள் அவை முட்டையிலிருந்து வெளியேறும் போதே செயற்படக் கூடியன.
இந்திய நாகம் | |
---|---|
![]() | |
Naja naja with hood spread open | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணிகள் |
துணைத்தொகுதி: | முதுகெலும்பிகள் |
வகுப்பு: | ஊர்வன |
வரிசை: | Squamata |
துணைவரிசை: | Serpentes |
குடும்பம்: | Elapidae |
பேரினம்: | Naja |
இனம்: | N. naja |
இருசொற் பெயரீடு | |
நாஜா நாஜா லின்னேயசு, 1758 | |
மேலும் பார்க்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.