இந்திய தேசிய நூலகம்

இந்திய தேசிய நூலகம் (National Library of India) இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் ஆகும். இந்திய அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்நூலகம் கொல்கத்தாவில் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது 22 இலட்சம் நூல்கள் இங்குள்ளன.[1] இந்தியாவின் நான்கு சேகரிப்பு நூலகங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவைப் பற்றிய, இந்திய மொழிகளில் வெளியான அனைத்து நூல்களும் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. [2]

இந்திய தேசிய நூலகம்

நிறுவல்:1836
இயக்குனர்:சுவபன் குமார் சக்ரபோதி
அமைவிடம்:அலிபூர், கொல்கத்தா
(22.533206°N 88.333318°E / 22.533206; 88.333318)
இணையத்தளம்:www.nationallibrary.gov.in

அனைத்து இந்திய மொழிகளில் மட்டுமன்றி, உலக மொழிகளில் எழுதப்பட்ட நூல்களும் இங்குள்ளன. இந்திய மொழிகளில் வங்காள மொழி, இந்தி, தமிழ் ஆகியன அதிக சேகரிப்புகளைக் கொண்டுள்ளன. உருசியம், அரபி, பிரெஞ்சு ஆகியன அதிக நூல்களைக் கொண்டுள்ள பிற நாட்டு மொழிகளாகும். இந்தியாவில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களும் இங்கு சேகரிக்கப்படுகின்றன. தமிழின் அரிய சுவடிகளும் நூல்களும் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசு ஆவணங்களும், ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்களும் இங்கு சேமிக்கப்பட்டுள்ளன. அறிவியல், தொழினுட்பம் தொடர்பான பல நூல்கள் இங்கு சேமிக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. Official website of National Library of India, Introduction of National Library of India
  2. "A long shelf life". HT Mint. 17 November 2012. http://www.livemint.com/Leisure/vovXthCcTpiCvVHtjg37HL/A-long-shelf-life.html. பார்த்த நாள்: 17 November 2012.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.