இணைவு (வானியல்)

வானியலில் இணைவு (syzygy) என்பது ஈர்ப்புவிசை காரணமாக மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வானியல் பொருட்கள் கிட்டத்தட்ட ஒரே நேர்க்கோட்டில் வருவதைக் குறிக்கும் சொல்லாகும்.[1]

கண்ணோட்டம்

இச்சொல் பெரும்பாலும் கதிரவன், புவி மற்றும் சந்திப்பு அல்லது எதிர்வு நிலையில் இருக்கும் நிலவு அல்லது ஒரு கோள் ஆகிய மூன்றையும் குறிக்கப் பயன்படுகிறது. மறைவு மற்றும் கடப்பு நிகழ்வது போல் கதிரவ மற்றும் நிலவு மறைப்புகளும் இணைவின் போது நிகழ்கின்றன. இப்பெயர் பெரும்பாலும் கதிரவன் மற்றும் நிலவு ஆகிய இரண்டும் சந்திப்பு (புதுநிலவு) அல்லது எதிர்வு (முழுநிலவு) நிலையில் இருப்பதைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது.[2]

புதன் கதிரவனைக் கடந்து செல்வதை செவ்வாயில் இருந்து காணும் கியூரியோசிட்டி தரையுளவி (சூலை 3, 2014).[3]

சூன் 3, 2014 அன்று செவ்வாயில் இருந்த கியூரியோசிட்டி தரையுளவி புதன் கோள் கதிரவனை கடந்து செல்வதைக் கண்டது. இதுவே புவியைத் தவிர்த்து மற்றொரு வான்பொருளில் முதன்முறையாகக் காணப்பட்ட கோள் கடப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வுகள்

  • மறைப்பு- ஒரு பெரிய பொருள் சிறிய பொருள் முன்பு கடந்து செல்லும் போது ஏற்படுகிறது.
  • கடப்பு- ஒரு சிறிய பொருள் பெரிய பொருள் முன்பு கடந்து செல்லும் போது ஏற்படுகிறது. இது வழக்கமாக நடைபெறும் போது இரண்டாம் மறைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஒளி மறைப்பு- ஒரு பொருள் முழுமையாக அல்லது பகுதியாக ஒருவரின் பார்வையில் இருந்து மறைக்கப்படும் போது ஏற்படுகிறது. இது கதிரவ மறைப்பு போன்று ஒரு மறைவு மூலமாகவோ அல்லது நிலவு மறைப்பு போன்று மற்றொரு பொருளின் நிழலில் கடந்து செல்வதன் மூலமாகவோ ஏற்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Her Majesty's Nautical Almanac Office and United States Naval Observatory (2012). "Syzygy". Glossary, The Astronomical Almanac Online. பார்த்த நாள் 2012-09-13.
  2. Coyle, Harold P. (2008). "Syzygy". AccessScience. ©McGraw-Hill Companies. பார்த்த நாள் May 5, 2012.
  3. Webster, Guy (June 10, 2014). "Mercury Passes in Front of the Sun, as Seen From Mars". நாசா. பார்த்த நாள் June 10, 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.