இடுகாடு

இடுகாடு அல்லது சுடுகாடு என்பது இறந்தவர்களை குழிதோண்டி புதைக்கும் ஒரு நிலப்பகுதி ஆகும்.[1] இது பொது இடம் என்றாலும், மக்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப சமயம் மற்றும் இனம் சார்ந்த தனித்தனி இடங்களில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு இறந்தவர்களின் உடலை (பிணம்) குழி தோண்டி புதைத்து இறுதிச் சடங்கு செய்கிறார்கள். சில பகுதிகளில் பிணங்களைப் புதைத்த இடத்தில் ஒரு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் மீண்டும் பிணங்களை புதைப்பார்கள். இது பெரும்பாலும் இந்து மதத்தின் வழக்கமாகும்.

ருமேனியாவில் உள்ள ஒரு கிருத்தவ கல்லறைத் தோட்டம்

கிறிஸ்தவ மதத்தில் இறந்தவர்களை புதைக்குமிடத்திற்கு கல்லறைத் தோட்டம் என்று பெயர். இது கிருத்துவ தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இங்கு இறந்தவர்களை புதைத்த இடத்தில் கல்லறை எழுப்புகின்றனர். இசுலாம் மதத்தில் இறந்தவர்களை புதைக்குமிடத்தை கபர்கிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இவை வகுப்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஸ்வீடன் நாட்டில் இறை மறுப்பாளர்களுக்கு தனியாக இடுகாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. "இடுகாடு". பொருள். http://agarathi.com.+பார்த்த நாள் 19 ஆகத்து 2017.
  2. "நாத்திகர்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் இடுகாடு!". செய்திக்கட்டுரை. http://ns7.tv/ta.+பார்த்த நாள் 19 ஆகத்து 2017.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.