இடபம் (விண்மீன் குழாம்)
இடபம் (ஆங்கிலம்:Taurus) ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டம் ஆகும். இது மேஷ ராசிக் குரிய ஏரெசு விண்மீன் கூட்டத்திற்கும், மிதுன ராசிக்குரிய ஜெமினி விண்மீன் கூட்டத்திற்கும் இடையில் உள்ளது.[2] நம் சூரியன் இக் கூட்டத்தை மே 14 முதல் ஜூன் 21 வரையில் கடந்து செல்கிறது.[3] கிரேக்க புராணத்தில் சியுசு என்ற கடவுள் பொனிசியாவின் இளவரசி ஈரோப்பாவை பாதுகாப்பாகக் கடத்திச் செல்ல காளை மாடாக உருமாறி அவளைத் தன் முதுகில் சுமந்து கொண்டு ஆற்றை நீந்திக் கடக்கிறார்.[4] ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தில் நீர் மட்டத்திக்கு மேலாகக் காளை மாட்டின் மேற்பகுதி மட்டுமே தெரிகிறது. புராணத்தின் இந்தக் கட்டத்தைக் குறிப்பிடுவதாக இந்த வட்டார விண்மீன் கூட்டம் காளை மாடாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் 125 விண்மீன்களுடன். பிளியாடெஸ், ஹையாடெஸ் என்ற இரு தனிக் கொத்து விண்மீன் கூட்டங்களையும் இனமறிந்துள்ளனர்.[5][6] இதை ஒட்டியே சைக்னஸ் (cygnus ) எனப்படும் நண்டு வடிவ நெபுலா உள்ளது.[7][8]

மேற்கோள்களும் குறிப்புகளும்
- "Taurus, the bull". Allthesky.com. பார்த்த நாள் 2012-05-16.
- Dr.M.Meyyappan (THURSDAY, NOVEMBER 24, 2011). "ரிஷப ராசி மண்டலமும் அண்டை வட்டாரங்களும்". Dr.M.Meyyappan. பார்த்த நாள் அக்டோபர் 31, 2012.
- Lewis, John S. (1997). Rain of iron and ice: the very real threat of comet and asteroid bombardment. Basic Books. பக். 48–49. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-201-15494-8.
- Ridpath, Ian (1989). Star tales. James Clarke & Co.. பக். 18–20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7188-2695-6.
- Schaaf, Fred (2008). The brightest stars: discovering the Universe through the sky's most brilliant stars. John Wiley and Sons. பக். 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-70410-2.
- Allen 1963, பக். 383.
- Hawkins, Gerald S. (2002). Mindsteps to the cosmos. World Scientific. பக். 231. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-238-123-1.
- Covington, Michael A. (2002). Celestial objects for modern telescopes. Cambridge University Press. பக். 240. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-52419-3.
உசாத்துணை நூல்கள்
- Allen, Richard Hinckley (1963) [1899]. Star names: their lore and meaning (corrected ). Dover Publications. பக். 383. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-486-21079-7.
- Levy, David H. (2005). Deep Sky Objects. Prometheus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59102-361-6.
- O'Meara, Stephen James (2011). Deep-sky companions: the secret deep. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-19876-9. http://books.google.com/books?id=v859bKO0A4gC&pg=PA84.
- Ridpath, Ian; Tirion, Wil (2003). Monthly sky guide (6th ). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-53306-5.
- Ian Ridpath; Wil Tirion (2007). Stars and planets guide. London: Collins. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-00-725120-9.