இடக்கரடக்கல்

சபையில் அல்லது சான்றோர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும்.

“இடக்கர்” என்றால் சான்றோர் எனப்படுவர்

"அடக்கல்" என்றால் சான்றோர் முன் கூறக்கூடாத வார்த்தைகள் என்று பொருள்[1].

அமங்கள நிகழ்வை மங்களப்படுத்திக் கூறும் போது சான்றோர் அவையில் கூற முடியாத சொற்களைத் தான் இடக்கரடக்கல் என்பர்.

தொல்காப்பியர் இதனை அவையல் கிளவி என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

சில உதாரணங்கள்

  • மலம் கழிக்கப் போனான் என்பதை “காட்டுக்குப் போனான்”, “கொல்லைக்குப் போனான்”, “வெளியே போனான்” என்று சொல்லுதல்.
  • கால் கழுவி வந்தான்
  • ஒன்றுக்குப் போனான்
  • வயிற்றுப்போக்கு (அவனுக்கு வயித்தால போகுது)
  • விளக்கு மங்கலாக ஒளிர்வதை கூடப்பற்றுகிறது எனக்கூறல்.
  • விளக்கை குளிர்வித்தான்

வெளி இணைப்புகள்

உசாத்துணைகள்

  1. "இடக்கரடக்கல் விளக்கம்". பார்த்த நாள் மார்ச்சு 06, 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.