இசையிழைத் தத்துவம்

இயற்கையிலுள்ள அனைத்து-வகை விசைகளையும் துகள்களையும் (எளிதில்) விளக்கும் விதமாக ஒரு ஒருங்கிணைந்த தத்துவம் தேவைப்படுகின்றது. இத்தகைய ஒரு தத்துவமே இசையிழைத் தத்துவம் ஆகும். (இழைத் தத்துவம் அல்லது அடிப்படையிழைத் தத்துவம் எனவும் அழைக்கப்படலாம்). இத்தத்துவத்தின் படி, இயற்கையில், புள்ளியையொத்த அடிப்படைத்துகள்களிற்கு மாறாக இழையையொத்த ஒரு பொருள் உள்ளது என்று கருதப்படுகிறது. இந்த இழை எதனாலும் உருவாக்கப்பட்டது இல்லை; மாறாக, இது ஒரு அடிப்படைப் பொருள், அனைத்து பொருள்களுமே இவ்விழையினால் ஆனவை. இசைக்கருவிகளின் நரம்புகளை மீட்டும் போது, அதிர்வுகளிற்கேற்ப சுருதி ஏற்படுவது போல, அடிப்படையிழைகளின் அதிர்வுகளுக்கேற்ப துகள்கள் உருவாகின்றன.[1]

ஏன் இழைத் தத்துவம்?

புதிய இயற்பியலின் தளம் குவாண்டம் இயற்பியல், பொது சார்பியல் தத்துவம் ஆகிய அடிப்படை இயல்களைச் சார்ந்தே அமைக்கப்பட்டுள்ளது; ஆனால் இவ்விரண்டு தத்துவங்களுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டு உள்ளன. அதாவது, சார்புக்குவாண்டம் விசையியலால் விளக்கப்படும் புலங்களை பொது சார்பியல் தத்துவத்தால் விளக்க இயலவில்லை; பொது சார்பியல் தத்துவத்தால் விளக்கப்படும் புலங்களை சார்புக்குவாண்டம் விசையியலால் விளக்க இயலவில்லை --- இத்தகைய சூழலில் இவ்விரண்டு தத்துவங்களையும் இணைக்கும் பாலமாக இழைத் தத்துவம் விளங்கக்கூடும்.[2]

மேற்கோள்கள்

  1. சுனில் முகி (1999)"The Theory of Strings: A Detailed Introduction"
  2. சுனில் முகி, அதிஷ் தபோல்கர், சுபெண்டா வாடியா Elements of String Theory
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.