இசை நாடகம்
இசை நாடகம் (Musical theatre) ஒரு வகையான நிகழ் கலை. பாடல்கள், வசனம், நடனம், நடிப்பு ஆகியவற்றை ஒரு சேரக் கலந்து வழங்குகின்றது. இசை நாடகங்கள், இசை, பாடல் வரிகள், வசனங்கள், நடன அசைவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நிகழ்த்தப்படும் கதையின் உணர்ச்சிகளை (நகைச்சுவை, காதல், சினம், மகிழ்ச்சி போன்றவை) வெளிக்கொணருகின்றன.
.jpg)
சிக்காகோ இசை நாடகத்தில் இருந்து ஒரு காட்சி
உலகெங்கிலும் பல்வேறு பண்பாடுகளில் இசையுடன் கலந்த நாடக மரபுகள் காணக்கிடைக்கின்றன. மேற்கத்திய இசை நாடகங்களின் தற்போதைய வடிவம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவானது. பிரித்தானியாவின் கில்பெர்ட்டும் சல்லிவானும் நிறுவனத்தார், அமெரிக்காவின் ஹங்கேரியும் ஹார்ட்டும் நிறுவனத்தார் போன்றோர் இக்கலை வடிவத்தின் முன்னோடிகள் எனலாம்.
மேலும் காண்க
மேற்கோள்கள்
- John Kenrick (25 March 2010). Musical Theatre: A History. Bloomsbury Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4411-4811-7. http://books.google.com/books?id=n1DKBAAAQBAJ.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.