இகுவாசு அருவி
இகுவாசு அருவி அல்லது இகுவாசு நீர்வீழ்ச்சி (Iguazu Falls) இகுவாசு ஆற்றில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். இது பிரேசில் நாட்டின், பரானா (Paraná) மாநிலம் 20%, ஆர்ஜெண்டீனாவின் மாகாணமான மிசியோனெஸ் (Misiones) 80% ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அமைவிட ஆள்கூறு 25°41′தெ, 54°26′மே ஆகும். பல நீர்வீழ்ச்சிகளின் தொகுதியாக அமைந்துள்ள இது, 2.7 கிலோமீட்டர் (1.67 மைல்) தொலைவில் 270 அளவு வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. இவற்றுட் சில 82 மீட்டர் (269 அடி) வரையான உயரத்தைக் கொண்டுள்ளன எனினும், பெரும்பாலானவை ஏறத்தாழ 64 மீட்டர் (210 அடி) உயரங்களையே கொண்டவை.

இகுவாசு அருவி
Iguazu Falls | |
---|---|
![]() View of Iguazu Falls | |
அமைவிடம் | Misiones Province. Paraná (state). |
ஆள்கூறு | 25°41′12″S 54°26′41″W |
வகை | Cataract |
மொத்த உயரம் | 60–82 மீட்டர்கள் (197–269 ft)[1] |
வீழ்ச்சி எண்ணிக்கை | 275[1] |
நீளமான வீழ்ச்சியின் உயரம் | 82 மீட்டர்கள் (269 ft)[1] |
மொத்த அகலம் | 2.7 கிலோமீட்டர்கள் (1.7 mi)[1] |
நீர்வழி | Iguazu River |
சராசரிப் பாய்ச்சல் வீதம் | 1,756 m3/s (62,010 cu ft/s)[1] |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.