ஆஷ்டன் குட்சர்

ஆஷ்டன் குட்சர் (Ashton Kutcher, பிறப்பு: பிப்ரவரி 7, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் விளம்ப்பர நடிகர் ஆவார். இவர் 1999ம் ஆண்டு கமிங் சூன் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து கெஸ் ஹூ, எ லாட் லைக் லவ், வேலண்டைன்ஸ் டே, ஜோப்ஸ் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் டூ அண்டு எ ஹாஃப் மென் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களும் நடித்துள்ளார்.

ஆஷ்டன் குட்சர்
பிறப்புஆஷ்டன் ஆஷ்டன் குட்சர்
பெப்ரவரி 7, 1978 ( 1978 -02-07)
அமெரிக்கா,
பணிநடிகர், தயாரிப்பாளர், விளம்ப்பரநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1998–அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
டெமி மூர் (2005–2013)

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் நடிகை டெமி மூரை 2003ம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். 24ம் திகதி 2005ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். 2013ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தார்கள்.

திரைப்பட வாழ்க்கை

இவர் 1999ம் ஆண்டு கமிங் சூன் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து கெஸ் ஹூ, எ லாட் லைக் லவ், வேலண்டைன்ஸ் டே, ஜோப்ஸ் உள்ளிட்ட 21 திரைப்படங்களில் நடித்துள்ளார். 2013ம் ஆண்டு ஜோப்ஸ் என்ற திரைப்படத்தில் ஸ்டீவ் ஜோப்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1999 கமிங் சூன்
2000 டவுன் டூ யூ
2000 ரெய்ண்டீர் கேம்ஸ்
2000 டூடு, வேர் இஸ் மை கார்?
2001 டெக்சாஸ் ரேஞ்சர்ஸ்
2003 ஜஸ்ட் மேரீடு
2003 மை பாஸ்’ஸ் டாட்டர்
2003 சீப்பர் பை த டசன் பெயர் குறிப்பிடப்படாதது
2004 தி பட்டர்பிளை எபெக்ட்
2005 கெஸ் ஹூ
2005 எ லாட் லைக் லவ்
2006 பாபி
2006 தி கார்டியன்
2006 ஓபன் சீஸன் குரல்
2008 வாட் ஹேப்பண்டு இன் வேகஸ்
2009 ஸ்ப்ரெட்
2009 பெர்சனல் எபெக்ட்ஸ்
2010 வேலண்டைன்ஸ் டே
2010 கில்லர்ஸ்
2011 நோ ஸ்டிரிங்க்ஸ் அட்டாச்டு
2011 நியூ இயர்ஸ் ஈவ்
2013 ஜோப்ஸ்

சின்னத்திரை

டூ அண்டு எ ஹாஃப் மென் திரைப்படத்தில் நடித்த ஜோன் கிரையருடன் ஆஷ்டன், செப்டம்பர் 2011

இவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் என்ற தட் '70 ஸ் ஷோ தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். அந்த தொடரை தொடர்ந்து ஜஸ்ட் ஷூட் மீ, ரோபோட் சிக்கன், மென் அட் வொர்க் உள்ளிட்ட 8 தொடர்களில் நடித்துள்ளார். தற்பொழுது டூ அண்டு எ ஹாஃப் மென் என்ற தொடரில் நடித்துகொண்டு இருக்கின்றார், இந்த தொடர் மாபெரும் வெற்றி தொடர் ஆகும்.

தொடர்கள்

  • 1998–2006 - தட் '70 ஸ் ஷோ
  • 2001 - ஜஸ்ட் ஷூட் மீ
  • 2002 - கிரவுண்டடு ஃபார் லைஃப்
  • 2003–2007, 2012 - பங்குடு
  • 2005 - ரோபோட் சிக்கன்
  • 2008 - மிஸ் கைடடு
  • 2011 – டூ அண்டு எ ஹாஃப் மென் - ஒளிபரப்பில்
  • 2013 - மேன் அட் வோர்க்

ஒரு தயாரிப்பாளராக

இவர் 2002ம் ஆண்டு பங்குடு என்ற தொடரை முதல் முதலில் தயாரித்தார். அதை தொடர்ந்து, பியூட்டி அண்டு த ஜீக், கேம் ஷோ இன் மை ஹெட், ரூம் 401 உள்ளிட்ட பல தொடர்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு Forever Young என்ற தொடரை தயாரித்துள்ளார் இந்த தொடர் தற்பொழுது ஒளிபரப்பாகின்றது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.