ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.
சங்கப்பாடல்களில் இவரது பாடல் ஒன்றே ஒன்று காணப்படுகிறது.[1]
இவரது தந்தை ஆவூர் கிழார் என்பரும் ஒரு புலவர்.
ஆவூர் தஞ்சை மாவட்டதில் உள்ளதோர் ஊர்
மேற்கோள் குறிப்பு
-
வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன்,
கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப,
புலிப் பகை வென்ற புண் கூர் யானை
கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்,
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் 5
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி,
சிறு பல் மின்மினி போல, பல உடன்
மணி நிற இரும் புதல் தாவும் நாட!
யாமே அன்றியும் உளர்கொல் பானாள்,
உத்தி அரவின் பைத் தலை துமிய, 10
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை,
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக,
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி
தேராது வரூஉம் நின்வயின்
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே? 15
இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது. - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் அகம் 202