ஆளுமைச் சிதைவு
ஆளுமைச் சிதைவு (Personality disorder) என்பது, சமகாலச் சமூகத்தின் பொதுவான எதிர்பார்ப்பில் இருந்து விலகிக் காணப்படும் ஆளுமை வகைகளில் ஒன்றாகும்.
ஆளுமைச் சிதைவு தொடர்பான நோயறிமுறைகள் பெரிதும் தற்சார்பு கொண்டவையாக உள்ளன. எனினும் வளைந்து கொடுக்காத, தவறான நடத்தைக் கோலங்களும், பொதுவான செயற்பாட்டுக் குறைபாடுகளும், பெரும்பாலும், தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றன. வளைந்து கொடாத; தொடர்ந்து இருக்கும் உணர்வுகள், சிந்தனைகள், நடத்தைகள் என்பன "நிலைத்த மனக்கண் வடிவம்" (fixed fantasies) அல்லது "செயற்பிறழ்வு மனக்கண் நோக்கு" (dysfunctional schemata) என அழைக்கப்படும் அடிப்படையாக அமைந்த நம்பிக்கை முறைமைகளினால் உருவாவதாகக் கருதப்படுகின்றது.
அமெரிக்க உளநோய் மருத்துவக் கழகம் ஆளுமைச் சிதைவு என்பதற்கு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது. இதன்படி ஆளுமைச் சிதைவு என்பது,
- "இந்நிலையை வெளிப்படுத்தும் ஒருவர் சார்ந்த பண்பாட்டினரின் எதிர்பார்ப்புக்குக் குறிப்பிடத் தக்க அளவு வேறுபாடான, தொடர்ந்திருக்கும் அக அனுபவம் மற்றும் நடத்தைக் கோலம் ஆகும்"