ஆல்பா செல்

ஆல்பா செல்கள் (Alpha cells) பொதுவாக α-செல்கள் (α-cells) கணையத்தின் திட்டுகளில் (islets) உள்ள நாளமில்லா செல்களில் உள்ளன. இவை மனிதனின் கணையத்தின் மூலம் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை உயர்த்தும் பெப்டைட் நாளமில்லா சுரப்பு குளுக்கோகனை உருவாக்கும் திட்டு செல்களை 20% வரை உண்டாக்குகின்றன.[1]

ஆல்ஃபா செல்
Alpha cell
கணையத் திட்டுகள்
THH3.04.02.0.00025
உடற்கூற்றியல்

பணிகள்

குளுக்கோஸ் அளவை உயர்த்துவதற்காக, குளுக்கோகன்கள், ஹெபடோசைட்டுகள் (கல்லீரல் செல்கள்) மற்றும் வேறு சில செல்களை (எ.கா. சிறுநீரக செல்கள்) ஏற்பிகளுடன் இணைக்கப் பயன்படுகின்றன. இந்தச் செயலால் கிளைகோஜென் பாஸ்போரிலேஸ் என்ற நொதி துாண்டப்பட்டு ஹெபோடோசைட்டின் உள்ளே கிளைக்கோசன் குளுக்கோஸாக மாறுகிறது.  இந்த செயல்முறை கிளைகோஜென் பகுப்பு என்று அழைக்கப்படுகிறது. வளைவாழ் விலங்குகளில், திட்டுகளின் புறப்பரப்பில் ஆல்ஃபா செல்கள் அமைந்திருக்கின்றன, ஆனால் மனிதர்களில் இக்கட்டமைப்பு பொதுவாக குறைவான ஒழுங்கமைவுடன் காணப்படுவதோடு கணையத்திட்டுகளின் உள்ளே ஆல்பா செல்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஒரு எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது, ஆல்பா செல்கள், பெரிய அடர்த்தியான மைய மற்றும் ஒரு சிறிய வெள்ளையான உறையுடன் காணப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Kerr, J B (2000). Atlas of functional histology. Uk: Mosby. பக். 309. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7234-3072-1.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.