ஆலன் கிரீன்சுபன்
ஆலன் கிரீன்சுபன் (Alan Greenspan மார்ச்சு 6, 1926) என்பவர் அமெரிக்கப் பொருளியல் அறிஞர். 1987 முதல் 2006 வரை பெடரல் ரிசர்வ் என்னும் அமெரிக்க நடுவண் வங்கியின் தலைவராக இருந்தவர். தாராளமயக் கொள்கையில் புகழ்பெற்ற அயன் ராண்ட் என்பவரின் சீடர் என்று ஆலன் கருதப்படுகிறார்.
ஆலன் கிரீன்சுபன் | |
---|---|
![]() | |
பிறப்பு | 6 மார்ச் 1926 (age 93) நியூயார்க் நகரம் |
படித்த இடங்கள் |
|
பணி | பொருளியலாளர்கள், வங்கியாளர், அரசியல்வாதி, தொழில் முனைவோர் |
விருதுகள் | Commander of the Legion of Honour, Order of the British Empire |
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரொனால்ட் ரீகன் காலத்தில் ஆலன் கிரீன்சுபன் இப்பதவியில் அமர்த்தப்பட்டார். இவர் ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் எச்.டபில்யூ. புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் வாக்கர் புஷ் ஆகிய நான்கு குடியரசுத் தலைவர்களுக்கும் பெடரல் ரெசர்வ் தலைவர் என்கிற முறையில் தம் பொருளியல் அறிவுரைகளையும் கருத்துகளையும் வழங்கும் வாய்ப்பு ஆலனுக்குக் கிடைத்தது.
1987 இல் அமெரிக்க நாடு சந்தித்த பெரும் சிக்கலான பங்குச் சந்தை சரிவை ஆலன் தம் பொருளாதார நடவடிக்கைகளால் தடுத்தார். 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் ஆலன் கொண்டு வந்த வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கையும், கட்டுப்பாடுகள் இல்லாத தளர்வுக் கொள்கையும் சில ஆண்டுகளில் வீட்டுக் கடன் அடமானப் பிரச்சினைகளுக்கு வழி வகுத்தன என்று ஆலன் மீது குறை சொல்லப்பட்டது.
தம் நினைவுகளைத் தொகுத்து ஒரு நூலை (The Age of Turbulence) எழுதி 2007 இல் வெளியிட்டார்.