ஆலங்குடி வங்கனார்

ஆலங்குடி வங்கனார் என்பவர் பண்டைக்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும் தமிழ்ச் சங்கங்களில், கடைச் சங்கத்தைச் சேர்ந்த 49 புலவர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். ஆலங்குடி என்னும் இடத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கு இப் பெயர் ஏற்பட்டது என்பர். இத் தகவல்களைத் தவிர இவர் வாழ்க்கை பற்றிய வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. வங்கம் என்பது கப்பல் எனப் பொருள் தரும். எனவே இவர் கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்த குடியைச் சேர்ந்தவர் என்று சிலர் கருதுகிறார்கள்.

இவர் பாடிய பாடல்கள் சங்கத் தமிழ் நூல்கள் சிலவற்றில் காணப்படுகின்றன. இவை மொத்தம் ஏழு ஆகும். குறுந்தொகையில் இரண்டு பாடல்களும், நற்றிணையில் மூன்று பாடல்களும், அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் தலா ஒவ்வொன்றும் இவர் பாடியவையாகக் குறிப்பிடப்படுகின்றன.

ஆலங்குடி இருப்பிடம் காண்க \ ஆலங்குடி

வங்கனார் பாடிய பாடல்கள்

  • அகநானூறு 106 மருதம்
  • குறுந்தொகை 8 மருதம்
  • குறுந்தொகை 45 மருதம்
  • நற்றிணை 230 மருதம்
  • நற்றிணை 330 மருதம்
  • நற்றிணை 400 மருதம்
  • புறநானூறு 319 \ வாகை \ வல்லான் முல்லை

இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள் அனைத்தும் மருதத்திணைப் பாடல்களாக உள்ளன. தலைவி ஊடலும், அவள் ஊடலுக்குக் காரணமான நிகழ்ச்சிகளும் மருதத்திணை.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.